புதன், 22 டிசம்பர், 2010

கொட்டகலை நகரில் அதிகாலை தீவிபத்து : உடைமைகளுக்குப்பெரும் சேதம்




கொட்டகலை நகரில்; 22 ஆம் திகதி அதிகாலை 1 .15 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டுகடைத்தொகுதிகளுடன் ஒரு வீடும் தீக்கிரையாகியுள்ளன. கொட்டகலை நகரிலுள்ள நுவரெலியா பிரதேச சபை பணிமனைக்கு முன்னாலுள்ள வர்த்தக நிலைய கட்டிடத்திலேயே இந்தத்தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் போது தொலைத்தொடர்பு நிலையமொன்றும் மின்உபகரணங்கள் திருத்தும் நிலையமொன்றும் இந்தக்கடைகளின் மேல் மாடியிலுள்ள வீடுடொன்றும் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன.
கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்களும் பத்தனை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.மின்சார சபையினர் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு வருகைத்தந்து மின்னிணைப்பினை துண்டித்துள்ளனர்.
மின்சார ஒழுக்கின் காரணமாகவே இந்தத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாமனெ சந்தேகிக்கப்படுகின்றது.இந்தச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.இந்தச்சம்பவம் தொடர்பாக பத்தனை பொலிஸார் விசாரணகைளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயனாளிகளுக்குப் பொருட்கள் பகிர்வு








ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதனின் இவ்வருடத்திற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து
பெறப்பட்ட பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு அண்மையில் ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் தலவாக்கலை ,மஸ்கெலியா ,அட்டன் பணிமனைகளில் இடம் பெற்றன.இந்தப்பொருட்களை மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் பயனாளிகளுக்கு ஒப்படைப்பதைப்படங்களில் காணலாம

செவ்வாய், 21 டிசம்பர், 2010

சிறு அபிவிருத்திப்பொருட்கள் கையளிப்பு







தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபையின் உறுப்பினருமான எம். உதயகுமாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 6 இலட்சம் ருபாவுக்குக்குப்பெறப்பட்ட பொருட்களைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வொன்று நுவரெலியா பிரதேச செயலக பணிமனையில் அண்மையில் இடம் பெற்ற போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் அக்கரப்பத்தனை அமைப்பாளர் சச்சிதானந்தன் ,மத்திய மாகாணசபை உறுப்பினர் எம்..உதயகுமாரின் இணைப்பாளர் நவா ,நுவரெலியா பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அனுர ரத்நாயக்க ஆகியோர் பயனாளிகளுக்குப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

திங்கள், 20 டிசம்பர், 2010

முன்பள்ளி கல்விச் சான்றிதழ் பாடநெறி மலையகத் தமிழ் சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதம் :விரிவுரையாளர் டி.தனராஜ்





மலையகத்தில் முன்பிள்ளை பருவ கற்கை நெறி கல்வித்துறை வளர்ச்சியில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று இலங்கைத் திறந்த பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டி.தனராஜ் தெரிவத்தார்.
அட்டன் தொண்டமான தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம் பெற்ற இலங்கைத்திறந்த பல்கலைக்கழக முன்பள்ளி கல்விச் சான்றிதழ் பாடநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வில் அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். பாடத்திட்ட இணைப்பாளர் விரிவுரையாளர் இராமதாஸ் பிரிடோ நிறுவனத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்திருந்த இந்த அங்குரார்ப்பண வைபவத்தில் திறந்த பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீட தலைவர் கலாநிதி சந்திரபோஸ், சிரேஸ்ட விரிவுரையாளர் முகுந்தன், அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.அரங்கராஜ் ,பத்தனை ஸ்ரீபாத கல்வியியற்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் சிவ.இராஜேந்திரன் , பிரிடோ நிறுவனத் தலைவர் மைக்கல் ஜோக்கிம் வெளிக்கள இணைப்பதிகாரி எஸ்.கே. சந்திரசேகரன்,கொட்டகலை ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் எஸ்.சேகர் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது : நமது மக்கள் பிரஜா உரிமையையும் வாக்குரிமையைம் இழந்த போது நமது சமூகம் அபிவிருத்திக்கான சகல உரிமைகளையும் இழந்துவிட்டது. இந்த இழப்பு கல்வித்துறையில் பெரிய பாதிபபை ஏற்படுத்தியது. . இதன் விளைவாக மற்றைய சமூகங்களுக்கும் மலையக சமூகத்திற்கும் கல்வித்துறையில் ஒரு பாரிய இடைவெளி ஏற்பட்டது. அண்மைக்காலமாக மலையக சமூகம் கல்வித்துறையில் படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகிறது என்பது உண்மையானாலும் ஏற்பட்ட இடைவெளியை நம்மால் இன்னும் குறைக்க முடியவில்லை. எமது சமூகம் தட்டுத்தடுமாறி ஓரடி முன்னெடுத்து வைக்கும் போது மற்றைய சமூகங்கள் வேகமான வளர்ச்சியை காட்டுவதால் இப்போதும் இடைவெளி அதிகரித்து செல்கிறதேயேன்றி குறையவில்லை. இந்த இடைவெளியை குறைக்க வேண்டுமானால் முன்பள்ளிப் பருவம் முதல் பல்கலைக்கழகம் வரையில் கல்வித்துறையில் வளர்சிக்காக பல முயற்சிளை செய்ய வேண்டியிருக்கிறது. ஆரம்பம் சிறப்பாக இருந்தால் மட்டுமே கல்வித்துறையில் நிலையான வளர்ச்சியை தக்கவைக்கலாம். இந்த வகையில் பெருந்தோட்டங்களில் முன்பள்ளிக்கல்வி வளர்சிக்கு ஒரு பெரிய பங்களிப்பை வழங்கிவரும் பிரிடோ நிறுவனத்தின் பணி பெரிதும் பாராட்டுக்குறியது. ஒரு பெருந்தோட்டத்தில் பொதுப்பணியை ஆரம்பித்து நடத்துவதில் இன்றும் கூட பெரும் சவால்களை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் ஒரு தசாப்பத்திற்கும் மேலாக பிரிடோ நிறுவனம் எதிர்நீச்சல் போட்டு இந்த பணிகளை முன்னெடுத்து வருகிறது. முன்பள்ளிக்கல்வியை மேலும் வலுப்படுத்த மலையக பகுதிகளில் திறந்த பல்கலைக்கழக முன்பள்ளை பருப சான்றிதழ் கற்கை நெறியை ஆரம்பிக்க வேண்டும் என்று பிரிடோ நிறுவனம் ஆரம்பமுதலே குரல் கொடுத்து அதற்கான பரப்புரையை செய்து வந்ததது. இது தொடர்பாக திறந்த பல்கலைக்கழக நிர்வாக மட்டத்தில் கொள்கை ரீதியாக ஒரு தீர்மானத்தை முன்வைக்க இந்த பரப்புரை எமக்கு பெரிதும் உதவியிருக்கிறது. மலையக பகுதிகளிலும் இந்த கற்கை நெறியயை ஆரப்பிக்க வேண்டும் என்ற தீர்மானம் திறந்த பல்கலைக்கழக நிர்வாக மட்டத்தில் இரண்டு வருடங்களுக்கு முதலே எடுக்கப்பட்டாலும் கூட இப்போது தான் அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. எல்லா முன்பள்ளி ஆசிரியைகளும் நல்ல தகுதியும் தராதரமும் பெற்ற ஆசிரியைகளாக வரவேண்டும் என்றே பிரிpடோ நிறுவனம் எதிர்பார்க்கிறது. எனவே இந்த பயிற்சிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆசரியைகள் தமது கற்றை நெறியை வெறுமனே ஆரம்ப பிள்ளை பருவ கற்கை நெறியுடன் நிறுத்திவிடாமல் அத்துறையில் மேலும் முன்னேறி பட்டம் பெறும் நிலைக்கு உயர வேண்டும். அதற்கு அப்பாலும் தகுதிகளை பெற முயற்சிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் ;மலையகத்தின் மற்றைய பகுதிகளிலும் ;இந்த கற்றைநெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதால் எவ்வளவு அதிகமானோர் முடியுமோ அவ்வளவு அதிகமானோர் இ;த்துறையில் தேர்ச்சி அடைவதே பிரிடோ நிறுவனத்தினதும் மலையக சமூகத்தினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்றார்.

அட்டன் நகரில் ஹெரோயின் போதைப்பொருள் கும்பலிடம் பொலிஸார் தொடர் விசாரணை

அட்டன் நகரின் பிரதான பஸ்தரிப்பு பகுதிக்கு அருகிலுள்ள சமனலகம கிராமத்தில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மூன்று பேரை அட்டன் பொலிஸார் 20 ஆம் திகதி பிற்பகல் வேளையில் அட்டன் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவர்கள் வசமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் 150 மில்லிகிராம் நிறையுடைய 14 சிறுபொதிகளையும் இவர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அட்டன் பொலிஸாருக்குக்கிடைத்த தகவலொன்றைத்தொடர்ந்தே அட்டன் பொலிஸ் நிலைய தலைமைப்பொறுப்பதிகாரி சமந்த ஜயசுந்தரவின் ஆலோசனைக்கேற்ப செயற்பட்ட பொலிஸ் குழு இந்தப்போதை பொருள் விற்பனை குழுவினரைச் சுற்றிவளைத்துள்ளனர்.இதன் போது இவர்கள் தொலைபேசி ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இந்தப்போதைப்பொருளினைக் கைப்பற்றியுள்ளனர்.அத்துடன் கைத்தொலைபேசியின் பெற்றரி வைக்கும் பகுதியிலேயே ஹெரோயின் போதைப்பொருளின் சிறுபொதிகளை மறைத்து வைத்து நகரப்பகுதிக்கு வந்து போதைப்பொருளினை விற்பனை செய்து வந்துள்ளனர்.இவர்களை அட்டன் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்..இவர்களின் ஒருவர் கொழும்பு கிரண்டபாஸைச்சேர்ந்தவர் என்றும் ஏனைய இருவரும் அட்டனைச்சேர்ந்தவர்களாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி கொத்மலை பிரதேசத்துக்கு வழங்கப்பட்டது.






தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து கொத்மலைப்பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளின் அபிவிருத்திட்டங்களுக்கென பெறப்பட்ட பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வொன்று அண்மையில் கொத்மலை பிரதேச சபை வளாகத்தில் இடம் பெற்றது.இதன் போது மத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.உதயகுமார் பயனாளிகளுக்குப்பொருட்களைக் கையளித்தார்.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

மனோகணேசனின் பிறந்த நாள் பூஜை

ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸ் மற்றம் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோகணேசனின் பிறந்த நானை முன்னிட்டு கொழுப்பில் இடம் பெற்ற பூஜை வழிபாடுகளில்
மனோகணேசனுடன் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதனும் கலந்து கொண்டார்.