திங்கள், 20 டிசம்பர், 2010

முன்பள்ளி கல்விச் சான்றிதழ் பாடநெறி மலையகத் தமிழ் சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதம் :விரிவுரையாளர் டி.தனராஜ்





மலையகத்தில் முன்பிள்ளை பருவ கற்கை நெறி கல்வித்துறை வளர்ச்சியில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று இலங்கைத் திறந்த பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டி.தனராஜ் தெரிவத்தார்.
அட்டன் தொண்டமான தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம் பெற்ற இலங்கைத்திறந்த பல்கலைக்கழக முன்பள்ளி கல்விச் சான்றிதழ் பாடநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வில் அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். பாடத்திட்ட இணைப்பாளர் விரிவுரையாளர் இராமதாஸ் பிரிடோ நிறுவனத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்திருந்த இந்த அங்குரார்ப்பண வைபவத்தில் திறந்த பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீட தலைவர் கலாநிதி சந்திரபோஸ், சிரேஸ்ட விரிவுரையாளர் முகுந்தன், அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.அரங்கராஜ் ,பத்தனை ஸ்ரீபாத கல்வியியற்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் சிவ.இராஜேந்திரன் , பிரிடோ நிறுவனத் தலைவர் மைக்கல் ஜோக்கிம் வெளிக்கள இணைப்பதிகாரி எஸ்.கே. சந்திரசேகரன்,கொட்டகலை ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் எஸ்.சேகர் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது : நமது மக்கள் பிரஜா உரிமையையும் வாக்குரிமையைம் இழந்த போது நமது சமூகம் அபிவிருத்திக்கான சகல உரிமைகளையும் இழந்துவிட்டது. இந்த இழப்பு கல்வித்துறையில் பெரிய பாதிபபை ஏற்படுத்தியது. . இதன் விளைவாக மற்றைய சமூகங்களுக்கும் மலையக சமூகத்திற்கும் கல்வித்துறையில் ஒரு பாரிய இடைவெளி ஏற்பட்டது. அண்மைக்காலமாக மலையக சமூகம் கல்வித்துறையில் படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகிறது என்பது உண்மையானாலும் ஏற்பட்ட இடைவெளியை நம்மால் இன்னும் குறைக்க முடியவில்லை. எமது சமூகம் தட்டுத்தடுமாறி ஓரடி முன்னெடுத்து வைக்கும் போது மற்றைய சமூகங்கள் வேகமான வளர்ச்சியை காட்டுவதால் இப்போதும் இடைவெளி அதிகரித்து செல்கிறதேயேன்றி குறையவில்லை. இந்த இடைவெளியை குறைக்க வேண்டுமானால் முன்பள்ளிப் பருவம் முதல் பல்கலைக்கழகம் வரையில் கல்வித்துறையில் வளர்சிக்காக பல முயற்சிளை செய்ய வேண்டியிருக்கிறது. ஆரம்பம் சிறப்பாக இருந்தால் மட்டுமே கல்வித்துறையில் நிலையான வளர்ச்சியை தக்கவைக்கலாம். இந்த வகையில் பெருந்தோட்டங்களில் முன்பள்ளிக்கல்வி வளர்சிக்கு ஒரு பெரிய பங்களிப்பை வழங்கிவரும் பிரிடோ நிறுவனத்தின் பணி பெரிதும் பாராட்டுக்குறியது. ஒரு பெருந்தோட்டத்தில் பொதுப்பணியை ஆரம்பித்து நடத்துவதில் இன்றும் கூட பெரும் சவால்களை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் ஒரு தசாப்பத்திற்கும் மேலாக பிரிடோ நிறுவனம் எதிர்நீச்சல் போட்டு இந்த பணிகளை முன்னெடுத்து வருகிறது. முன்பள்ளிக்கல்வியை மேலும் வலுப்படுத்த மலையக பகுதிகளில் திறந்த பல்கலைக்கழக முன்பள்ளை பருப சான்றிதழ் கற்கை நெறியை ஆரம்பிக்க வேண்டும் என்று பிரிடோ நிறுவனம் ஆரம்பமுதலே குரல் கொடுத்து அதற்கான பரப்புரையை செய்து வந்ததது. இது தொடர்பாக திறந்த பல்கலைக்கழக நிர்வாக மட்டத்தில் கொள்கை ரீதியாக ஒரு தீர்மானத்தை முன்வைக்க இந்த பரப்புரை எமக்கு பெரிதும் உதவியிருக்கிறது. மலையக பகுதிகளிலும் இந்த கற்கை நெறியயை ஆரப்பிக்க வேண்டும் என்ற தீர்மானம் திறந்த பல்கலைக்கழக நிர்வாக மட்டத்தில் இரண்டு வருடங்களுக்கு முதலே எடுக்கப்பட்டாலும் கூட இப்போது தான் அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. எல்லா முன்பள்ளி ஆசிரியைகளும் நல்ல தகுதியும் தராதரமும் பெற்ற ஆசிரியைகளாக வரவேண்டும் என்றே பிரிpடோ நிறுவனம் எதிர்பார்க்கிறது. எனவே இந்த பயிற்சிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆசரியைகள் தமது கற்றை நெறியை வெறுமனே ஆரம்ப பிள்ளை பருவ கற்கை நெறியுடன் நிறுத்திவிடாமல் அத்துறையில் மேலும் முன்னேறி பட்டம் பெறும் நிலைக்கு உயர வேண்டும். அதற்கு அப்பாலும் தகுதிகளை பெற முயற்சிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் ;மலையகத்தின் மற்றைய பகுதிகளிலும் ;இந்த கற்றைநெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதால் எவ்வளவு அதிகமானோர் முடியுமோ அவ்வளவு அதிகமானோர் இ;த்துறையில் தேர்ச்சி அடைவதே பிரிடோ நிறுவனத்தினதும் மலையக சமூகத்தினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்றார்.

கருத்துகள் இல்லை: