கண்டி இந்திய உதவி தூதரகத்தின் அனுசரணையுடன் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு உபகரணங்களை கண்டி உதவி இந்திய தூதரகத்தின் உதவிச்செயலாளர் ஓ.பி. ஸ்ரீவத்சாவா கல்லூரியின் பிரதி அதிபர் பத்மநாதனிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் இந்தக்கல்லூரியின் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
வெள்ளி, 30 செப்டம்பர், 2011
வியாழன், 29 செப்டம்பர், 2011
கொட்டியாட்டியாக்கலைத் தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொகவந்தலாவை கொட்டியாக்கலைத் தோட்டப்பிரிவுகளில் கடந்த பல நாட்களாக தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பில் அட்டன் உதவி தொழில் ஆணையாளர் முன்னிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தோட்ட முகாமைத்துவத்துக்குமிடையில் இன்று பொகவந்தலாவையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்தப்பேச்சுவார்த்தையில் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் உட்பட சில தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கொட்டியாக்கலைத் தோட்டத்தொழிலாளர்கள் தற்போது ஒரு நாட் அடிப்படைச்சம்பளத்திற்காக பறிக்கின்ற கொழுந்தினைத் தொடர்ந்து பறிக்க வேண்டும் என்றும் எதிர்வரும் 6 ஆம் திகதி அட்டன் தொழிற்திணைக்களத்தில் பேச்சுவார்த்தை இடம் பெறும் வரை தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்ய மாட்டாரென்றும் இந்தப்பேச்சுவார்ததையின் போது தீர்மானிக்கப்பட்டதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தெரிவித்தார்.

புதன், 28 செப்டம்பர், 2011
தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி
கடந்த 25 ஆம் திகதி லிந்துலை நாகசேநை தோட்டத்தில் லயன் குடியிருப்பொன்று தீவிபத்தினால் சேதமுற்ற போது அந்தக்குடியிருப்பில் வாழ்ந்த 10 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் தற்போது லிந்துலை டிலிகூல்ற்றி தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களை நேற்று 27 ஆம் திகதி சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்லைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம். உதயகுமார் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நிதியுதவினை
வழங்கினார்.

மலையகத்தமிழ் மாணவர்கள் தொடர் கற்றலில் அக்கறை செலுத்த வேண்டும் : ம.மா. உ. எம். உதயகுமார்
கல்வியில் சிறந்து விளங்குகின்றவர்கள் மூலமாகவே சிறந்த சமூகமொன்றினைக்கட்டியெழுப்ப முடியும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.
லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் 27 ஆம் திகதி இடம் பெற்ற நிகழ்வொன்று கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது ஐந்hந்தரப்பலமைப்பரிசில் பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களுக்கும் இந்தப்பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. பல்வேறு கஷ்டங்களில் மத்தியில் வாழுகின்ற பெருந்தோட்ட மாணவர் சமூகத்தினர் தொடர்ச்சியான கற்றலுக்கு முக்கியத்துவம் செலுத்த வேண்டும். உயர்தரத்தில் கலைப்பிரிவில் மாத்திரம் அக்கறை செலுத்தாமல் சட்டம் ,விஞ்ஞானம் ,கணிதத்துறையிலும் மாணவர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் எம். உதயகுமார் மேலும் தெரிவி;த்தார்.

டிக்கோயா பீரட் தோட்ட வைத்தியசாலைக்குப் பொருளுதவி
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம். உதயகுமார் டிக்கோயா பீரட் தோட்ட வைத்தியசாலைக்கு மருந்துப்பொருட்களையும் மகப்பேற்றுப்பிரிவுக்குத் தேவையான பொருட்களையும் தோட்ட வைத்தியரிடம் நேற்று 27 ஆம் திகதி வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பீரட் தோட்ட அதிகாரிகள் , தோட்ட மக்கள் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பீரட் தோட்ட அதிகாரிகள் , தோட்ட மக்கள் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியில் 40 மாணவர்கள் சித்தி
இவ்வருடம் இடம் பெற்ற ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 102 மாணவர்களில் 40 மாணவர்கள் சித்திப்பெற்றுள்ளனர். மேலும் 53 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். ஆர். ரோய்ஸ் தீபன் 188 புள்ளிகளைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் 2 ஆவது இடத்தினையும் வை. லுதர்சன் 180 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 9 ஆவது இடத்தையும் என். ராகவி 180 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 9 ஆவது இடத்தையும் என். தினுசிகா 178 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 15 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளனர்.
மேலும் எஸ். யுவராஜன் 175 புள்ளிகளையும் எஸ்.சதுசனா 174 புள்ளிகளையும் ஆர். அபினா ஏவன்ஜலின் 173 புள்ளிகளையும் எஸ். அபிஷேக் 172 புள்ளிகளையும் எஸ்.சதுர்ஷிகா , எஸ்;. நவீன்யா காயத்திரி , டி. அபிராமி ஆகியோர் 171 புள்ளிகளையும் வி. கையூரன் 170 புள்ளிகளையும் எஸ்.சிந்துஜா 168 புள்ளிகளையும் எஸ். ஹரினி 167 புள்ளிகளையும் கே. துசாலிகா ,டி. தக்ஷானி ஆகியோர் 166 புள்ளிகளையும் எம்.கார்த்திகா , என். திவோன்அனுஷ்கர் , பி. தியோன் ஜொனதன் ஆகியோர் 165 புள்ளிகளையும் எஸ்.நிரோன்வின்குமார் , வி.யஸ்வின் , கே. ட்ரேசி ஒலிவியா , எஸ். டிலானி டினிஷிகா ஆகியோர் 164 புள்ளிகளையும் எல். டிலுக்ஷன் 163 புள்ளிகளையும் பி. மொஹமட் பஹான் 160 புள்ளிகளையும் எம். ஜக்கீர் முஹமட் ருஸயன் , ஆர்.கவிப்பிரியன் ,ஏ.எஸ்தர் ஜோஹான்னா ஆகியோர் 158 புள்ளிகளையும் என் இந்தன்ஷியா , எஸ்.ஹம்சிதான் ஆகியோர் 156 புள்ளிகளையும் ஏ. மதுர்ஷன் , இ. சிவரூபன் ஆகியோர் 155 புள்ளிகளையும் வி. விக்காஷனா 154 புள்ளிகளையும் எம். ஷிரோஸ் முஹமட் ஷப்ரி 153 புள்ளிகளையும் என். லக்ஷிகா 152 புள்ளிகளையும் ஆர் .ரோஷான் ,எஸ். பிரணவன் , பி.சுவாதி ஆகியோர் 151 புள்ளிகளையும் என்.தனுஜா , எஸ்.ஜெயநீதன் ஆகியோர் 149 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை வழிநடத்திய ஹைலண்ஸ் கல்லூரியின் ஆரம்பப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதி அதிபர் எம்.ஜோர்ஜ் விசுவாசம் மாணவர்களுக்குக்ற்பித்த ஆசிரியைகளான திருமதி .கே. இந்திராகாந்தி ,திருமதி , பி.இராஜேஸ்வரி , திருமதி வி. கலையரசி ஆகியோருக்கு கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
செவ்வாய், 27 செப்டம்பர், 2011
தரம் 5 பரீட்சையில் அட்டன் பொஸ்கோ கல்லூரியில் 15 பேர் சித்தி
இவ்வருடம் இடம் பெற்ற ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் அட்டன் பொஸ்கோகல்லூரியிலிருந்து தமிழ் மொழிப்பிரிவில் தோற்றிய மாணவர்களில் 15 பேர் சித்திப்பெற்றுள்ளனர். எம். பவன்ஹனும் ( 183 புள்ளிகள் ) எஸ். ஜோய் ஜக்கின்சன் ( 181 புள்ளிகள் ) கே.. அபிஷேக் ( 180 புள்ளிகள் ) கே. கபிலன் ( 174 புள்ளிகள் ) டி. ஷகில் ( 170 புள்ளிகள் ) ஈ . சஞ்ஜை ( 160 புள்ளிகள் )
டி. கிருஷாந்தன் ( 159 புள்ளிகள் ) கே. லக்ஜான் ( 158 புள்ளிகள் )
எஸ். ஜெக்சன் பிரேங் ( 157 புள்ளிகள் ) ஏ. கெவின்லாசன் ( 154 புள்ளிகள் )
அம்.டி. உஸ்மான் ( 154 புள்ளிகள் ) எஸ். நவீந்திரன் ( 153 புள்ளிகள் )
எம். பாரத் ( 153 புள்ளிகள் ) எஸ். சஜன் ( 150 புள்ளிகள் ) எஸ். ரென்யு பிரனோஸ் ( 149 புள்ளிகள் ) பெற்றுள்ளனர். இந்த மாணவர்களுடன் கல்லூரி அதிபர் என்.எஸ்.குரூஸ் , உப அதிபர் சங்கரமணிவண்ணன் , ஆரம்பப்பிரிவு தலைவர் திருமதி எம்.கீதாஞ்சலி , கற்பித்த ஆசிரியர்களான வை. ரேணுகாதேவி, சுசானா மெக்லின் மேரி, ஏ. வசந்தி ஆகியோரை படங்களில் காணலாம்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011
கோயில் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)