மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
புதன், 28 செப்டம்பர், 2011
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியில் 40 மாணவர்கள் சித்தி
இவ்வருடம் இடம் பெற்ற ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 102 மாணவர்களில் 40 மாணவர்கள் சித்திப்பெற்றுள்ளனர். மேலும் 53 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். ஆர். ரோய்ஸ் தீபன் 188 புள்ளிகளைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் 2 ஆவது இடத்தினையும் வை. லுதர்சன் 180 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 9 ஆவது இடத்தையும் என். ராகவி 180 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 9 ஆவது இடத்தையும் என். தினுசிகா 178 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 15 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளனர்.
மேலும் எஸ். யுவராஜன் 175 புள்ளிகளையும் எஸ்.சதுசனா 174 புள்ளிகளையும் ஆர். அபினா ஏவன்ஜலின் 173 புள்ளிகளையும் எஸ். அபிஷேக் 172 புள்ளிகளையும் எஸ்.சதுர்ஷிகா , எஸ்;. நவீன்யா காயத்திரி , டி. அபிராமி ஆகியோர் 171 புள்ளிகளையும் வி. கையூரன் 170 புள்ளிகளையும் எஸ்.சிந்துஜா 168 புள்ளிகளையும் எஸ். ஹரினி 167 புள்ளிகளையும் கே. துசாலிகா ,டி. தக்ஷானி ஆகியோர் 166 புள்ளிகளையும் எம்.கார்த்திகா , என். திவோன்அனுஷ்கர் , பி. தியோன் ஜொனதன் ஆகியோர் 165 புள்ளிகளையும் எஸ்.நிரோன்வின்குமார் , வி.யஸ்வின் , கே. ட்ரேசி ஒலிவியா , எஸ். டிலானி டினிஷிகா ஆகியோர் 164 புள்ளிகளையும் எல். டிலுக்ஷன் 163 புள்ளிகளையும் பி. மொஹமட் பஹான் 160 புள்ளிகளையும் எம். ஜக்கீர் முஹமட் ருஸயன் , ஆர்.கவிப்பிரியன் ,ஏ.எஸ்தர் ஜோஹான்னா ஆகியோர் 158 புள்ளிகளையும் என் இந்தன்ஷியா , எஸ்.ஹம்சிதான் ஆகியோர் 156 புள்ளிகளையும் ஏ. மதுர்ஷன் , இ. சிவரூபன் ஆகியோர் 155 புள்ளிகளையும் வி. விக்காஷனா 154 புள்ளிகளையும் எம். ஷிரோஸ் முஹமட் ஷப்ரி 153 புள்ளிகளையும் என். லக்ஷிகா 152 புள்ளிகளையும் ஆர் .ரோஷான் ,எஸ். பிரணவன் , பி.சுவாதி ஆகியோர் 151 புள்ளிகளையும் என்.தனுஜா , எஸ்.ஜெயநீதன் ஆகியோர் 149 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை வழிநடத்திய ஹைலண்ஸ் கல்லூரியின் ஆரம்பப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதி அதிபர் எம்.ஜோர்ஜ் விசுவாசம் மாணவர்களுக்குக்ற்பித்த ஆசிரியைகளான திருமதி .கே. இந்திராகாந்தி ,திருமதி , பி.இராஜேஸ்வரி , திருமதி வி. கலையரசி ஆகியோருக்கு கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக