கல்வியில் சிறந்து விளங்குகின்றவர்கள் மூலமாகவே சிறந்த சமூகமொன்றினைக்கட்டியெழுப்ப முடியும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.
லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் 27 ஆம் திகதி இடம் பெற்ற நிகழ்வொன்று கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது ஐந்hந்தரப்பலமைப்பரிசில் பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களுக்கும் இந்தப்பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. பல்வேறு கஷ்டங்களில் மத்தியில் வாழுகின்ற பெருந்தோட்ட மாணவர் சமூகத்தினர் தொடர்ச்சியான கற்றலுக்கு முக்கியத்துவம் செலுத்த வேண்டும். உயர்தரத்தில் கலைப்பிரிவில் மாத்திரம் அக்கறை செலுத்தாமல் சட்டம் ,விஞ்ஞானம் ,கணிதத்துறையிலும் மாணவர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் எம். உதயகுமார் மேலும் தெரிவி;த்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக