தோட்டத்தொழிலாளர்கள் எதிர் நோக்குகின்ற தொழிற்பிணக்குகளைத் தீர்த்து வைக்கின்ற அதே வேளைத் தோட்டப்பகுதிகளின் அபிவிருத்தியிலும் தொழிலாளர் தேசிய சங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட தொழிலுறவு நிருவாக ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்பொன்னையா தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப டிக்கோயா காசல்ரீ தோட்டத்தில் இதுவரை காலமும் மின்னிணைப்பு வசதியில்லாதவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவி;த்தார்.
இன்று 2 ஆம் திகதி மாலை இடம் பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் ,தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியொதுக்கீடுகளில் காசல்ரீ ,லெதண்டி , காபெக்ஸ் ,சமர்வெலி உட்பட பல தோட்டங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னரிமை வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக