செவ்வாய், 4 அக்டோபர், 2011

சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு ஆக்க இலக்கிய மற்றும் விளையாட்டுப்போட்டிகள் : மலையக ஆசிரியர் ஒன்றியம் ஏற்பாடு

கடந்த இரண்டு தசாப்தங்களாக மலையக ஆசிரியர்களின் கௌரத்தையும் தாற்பரியத்தையும் வளர்த்தெடுத்த மலையக ஆசிரியர் ஒன்றியம் இவ்வாண்டிலும் ஆசிரியத்துவத்தின் செழுமையைக் காத்தெடுக்க துணிந்துள்ள எமது அங்கத்தினர்களுக்கு இனிய ஆசிரிய தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதி;ல் பெரும் மகிழ்வு கொள்கிறது என்று சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் ஆர். ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்களின் உரிமையையும் கௌரவத்தையும் வென்றெடுப்பதில் தங்களின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பை நினைவு கூர்வதோடு தொடர்ந்தும் இதே காத்திரமிக்க பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். இநந்த நிலையில் இந்த ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு எமது அங்கத்தவர்களுக்கிடையில் ஆக்க இலக்கிய போட்டிகளையும் விளையாட்டுப்போட்டிகளையும் இவ்வருடமும் சிறப்பாக கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தப்போட்டிகள் பற்றிய விதிமுறைகளை எமது அங்கத்தவர்களுக்கு பின்வருமாறு தெரிவித்துக்கொள்கின்றோம். ஆக்க, இலக்கிய போட்டிகளாக கவிதை ,சிறுகதை , கட்டுரை ஆகிய போட்டிகளை நடத்த உள்ளோம். இந்தப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளவர்கள் பின்வரும் விடயங்கள் கவனம் செலுத்த வேண்டும். படைப்புகள் சழூக அக்கறை மிக்கதாக இருத்தல் வேண்டும். கவிதைகள் மரபு கவிதையாகவோ புதுகவிதையாகவோ அமையலாம்.. கட்டுரைகள் ஆய்வு பண்புகளை கொண்டதாகவும் உசாத்துணைகள் இணைக்கப்பட்டதாகவும் இருத்தல் வேண்டும். ஆக்கங்கள் ஒரு பக்கத்திள் மட்டும் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்புதல் வேண்டும். ஏலவே பிரசுரிக்கப்பட்டதாகவோ தழுவலாகவோ இருத்தல் கூடாது. ஆக்கங்கள் 07.11.2011க்கு முன்பதாக செயலாளர் மலையக ஆசிரியர் ஒன்றியம் 133 1ஃ1 திம்புள்ள வீதி ஹட்டன். என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். ஆக்க இலக்கிய போட்டிகளுக்கான பரிசில்கள் வழங்கப்படும்;.
ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளாக உள்ளக விளையாட்டு போட்டி ,கிளைச் சங்கங்களுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி , தடகள போட்டிகள் என்பன இடம் பெறவுள்ளன. விளையாட்டுப் போட்டிகளுக்கான திகதி உரிய காலத்தில் அறிவிக்கப்படும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கடந்தகாலங்களைப்போல பெறுமதி மிக்கப் பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை: