மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
திங்கள், 2 ஜனவரி, 2012
பலரின் பங்களிப்புடன் கிடைத்த வசதியான வீடு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இளைஞர் விவகார அமைச்சும் இணைந்து கடந்த வருடம் நடைமுறைப்படுத்திய ' இளைஞர் வருடமும் கிராமத்துக்கான வீடும்' என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சாமிமலை ஸ்டொக்கம் நாமகள் ஐக்கிய இளைஞர் கழகத்தின் அங்கத்தவர்களான தோட்டத்தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு சகல தரப்பினரின் பங்களிப்புடன் வீடொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டொக்கம் தோட்டத்தின் நாமகள் ஐக்கிய இளைஞர் கழகத்தின் தலைவர் கருணாகரன் அவரின் மனைவியும் இந்தக்கழகத்தின் அங்கத்தவருமான ரஞ்சனி ஆகிய தம்பதிகளுக்கே இந்த வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டினை அமைத்துக்கொள்ளவதற்கான இடத்தினை ஸ்டொக்கம் தோட்ட முகாமையாளர் வசந்தகுணணரத்ன வழங்கியுள்ளார்.
மேலும் வீட்டினை அமைத்துக்கொள்வதற்காக இளைஞர் சேவைகள் மன்றம் ஒரு இலட்சம் ரூபாவையும் வீட்டின் கூரைத்தகடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து 50 ஆயிரம் ரூபாவையும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனராஜ் 20 ஆயிரம் ரூபாவையும் வழங்கியதோடு அம்பகமுவ பிரதேச சபை 10 ஆயிரம் ரூபாவையும் சேவா லங்கா மற்றும் வேல்ட் விசன் ஆகிய நிறுவனங்கள் தலா 30 ஆயிரம் ரூபாவையும் வழங்கியுள்ளன.
மேற்படி தம்பதிகளுக்கான இந்த வீட்டினைப் அமைத்துக்கொடுப்பதில் கினிகத்தேனை பிரNதுச இளைஞர் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியம் ,விளையாட்டு அதிகாரி கிங்ஸ்லி ,அம்பகமுவ பிரNதுச சபை உறுப்பினர் கே.சுரேஷ்குமார் ,தோட்ட முகாமையாளர் வசந்த குணரத்ன ,நாமகள் ஐக்கிய இளைஞர் கழகத்தின் அங்கத்தவர்கள் ஆகியோர் பல்வேறு உதவிகளை நல்கியுள்ளனர்.
நீண்டகாலமாக வீட்டு வசதியின் வாழ்ந்து வந்த கருணாகரன் - ரஞ்சனி தம்பதிகளுக்குப் பலதரப்பினரின் பங்களிப்புடன் கிடைத்துள்ள இந்த வீட்டின் திறப்பு விழா அண்மையில் வெகுசிறப்பாக இடம் பெற்றமைக்குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக