வெள்ளி, 18 ஜனவரி, 2013

பொகவந்தலாவை ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான முத்தேர் பவனி பெருவிழா




இலங்கையில் ஈழத்துப் பழனி என்று போற்றப்படும் பொகவந்தலாவை நகர் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் 78 ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவ முத்தேர் பவனி இன்று 18 ஆம் திகதி இடம் பெற்றது.
இந்த முத்தேர் பவனி பெருவிழாவினை முன்னிட்டு மகோற்சவ ஆரம்பமும் கொடியேற்றமும் கடந்த  7 ஆம் திகதி இடம் பெற்றது.
தொடர்ந்து மகோற்சவ கால கிரியை நிகழ்வுகள் இடம் பெற்றன. இன்று 18 ஆம் திகதி இடம் பெற்ற முத்தேர் பவனியில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நாளை  19 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் 20 ஆம் திகதி பூங்காவனமும் இடம் பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது


நாளை  20 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நுவரெலியா பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் கேட்போர் கூடத்தில் காலை 10 மணி முதல் இடம்பெற ஏற்பாடாகியிருந்த பிராந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது
சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டுடன் படிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பெருந்தோட்ட கம்பனிகளின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தும் வகையில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து சகல பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் அறிவித்தலை விடுப்பதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மேற்கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டிருப்பின் அதற்காக தமது ஆழ்ந்த வருத்தத்தை இத்தால் தெரிவித்துக் கொள்வதாகவும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கலந்துரையாடலுக்கான புதிய திகதி குறித்து விரைவில்  அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் விரைவில் அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

வியாழன், 3 ஜனவரி, 2013

வட்டவளையில் சாணம் ஏற்றி வந்த ரிப்பர் வாகனம் விபத்து


வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை டி கார்டன் வளைவுக்கு அருகில் ரிப்பர் வாகனமொன்று இன்று 3 ஆம் திகதி  மாலை 4..30 மணியளவில் விபத்துக்கு உள்ளானது.
கினிகத்தேனை – அட்டன் பிரதான பாதையில் வட்டவளை டி கார்டன் விடுதிக்கு அருகிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வட்டவளை தோட்;டத்திலிருந்து நுவரெலியாவுக்கு மாட்டுச் சாணம் ஏற்றி வந்த இந்த ரிப்பர் வாகனம் குறுக்குப் பாதை ஒன்றிலிருந்து கினிகத்தேனை – அட்டன் பிரதான பாதைக்கு திருப்ப முற்பட்ட போது குறிப்பிட்ட வாகனம் தொழினுட்பக் கோளாறு காரணமாக பின்நோக்கி இழுபட்டு வந்து பள்ளத்தில் சரிந்துள்ளது.
இந்தச்சம்பவத்தில் வாகன சாரதியும் நடத்துநரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். இந்தச்சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. எனினும் தேயிலைச்செடிகள் சிலவற்றுக்கும் ரிப்பர் வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்தச்சம்பவம் தொடர்பாக வட்டவளை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.