வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை டி கார்டன் வளைவுக்கு அருகில் ரிப்பர் வாகனமொன்று இன்று 3 ஆம் திகதி மாலை 4..30 மணியளவில் விபத்துக்கு உள்ளானது.
கினிகத்தேனை – அட்டன் பிரதான பாதையில் வட்டவளை டி கார்டன் விடுதிக்கு அருகிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வட்டவளை தோட்;டத்திலிருந்து நுவரெலியாவுக்கு மாட்டுச் சாணம் ஏற்றி வந்த இந்த ரிப்பர் வாகனம் குறுக்குப் பாதை ஒன்றிலிருந்து கினிகத்தேனை – அட்டன் பிரதான பாதைக்கு திருப்ப முற்பட்ட போது குறிப்பிட்ட வாகனம் தொழினுட்பக் கோளாறு காரணமாக பின்நோக்கி இழுபட்டு வந்து பள்ளத்தில் சரிந்துள்ளது.
இந்தச்சம்பவத்தில் வாகன சாரதியும் நடத்துநரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். இந்தச்சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. எனினும் தேயிலைச்செடிகள் சிலவற்றுக்கும் ரிப்பர் வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்தச்சம்பவம் தொடர்பாக வட்டவளை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக