வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ள சாமிமலை கிரீன்லைட் குடியிருப்பிலுள்ள 35 குடும்பங்களுக்கும் மாற்று காணிகளை வழங்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் கோரியுள்ளார்.
இது தொடர்பில் கிரீன்லைன் குடியிருப்பு மக்கள் தன்னிடம் முன்வைத்த கோரிக்கைகளை
மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவவை சந்தித்து தெரிவிக்கவுள்ளதாக கூறினார். அதே வேளை வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு விரைவில் மாற்று காணிகளை வழங்கி அவர்களுக்கு வீடமைப்பதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி
தருமாறும் மத்திய மாகாண ஆளுநரிடம் கோரவுள்ளதாகவும் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக