மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
சனி, 9 ஜூலை, 2011
50 ஆயிரம் கையொப்பங்கள் கையளிப்பு
பிரதேசசபை சேவைகளை தோட்டப்புறங்களுக்கு விரிவுப்படுத்தல் மற்றும் தோட்டக்குடியிருப்புகளை பிரதேச அலகுகளுக்கு கீழ் கொண்டுவருதல் தொடர்பான கையெழுத்து மகஜர் - நுவரெலியா மாவட்டச்செயலாளருக்கு பெருந்தோட்டத்துறை சமூகமாமன்றம் கையளித்துள்ளது.
பெருந்தோட்டத்துறை சமூகமாமன்றத்தின் அங்கத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் அண்மையில் நுவரெலியா மாவட்டச்செயலாளரை சந்தித்து பிரதேசசபை சேவைகளை தோட்டப்புறங்களுக்கும் விஸ்தரித்தல் மற்றும் தோட்டத்குடியிருப்புகளை கிராமங்களாக அங்கீகரித்தல் தொடர்பான 50000 இற்கும் மேற்பட்ட கையெழுத்து அடங்கிய மகஜரை கையளித்தனர். இச்சந்திப்பில் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டதாவது, நுவரெலியா மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருப்பதை தான் 20 வருடங்களுக்கு மேலாக அறிந்திருப்பதாகவும், தன்னாலான எல்லாவித முயற்சிகளையும் எடுத்துள்ளதாகவும், தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டதோடு, உங்களைப்போன்ற நிறுவனங்கள் இதற்கான காத்திரமான பங்களிப்பினை வழங்குவதானது சிறப்பான ஒன்றாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிட்டதாவது எதிர்வரும் காலங்களில் உத்தேசிக்கப்பட்டுள்ள பிரதேச செயலக விஸ்தரிப்பில் நுவரெலியா மாவட்டத்திற்கு 12 பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படவிருப்பதாகவும் இதன் மூலம் முன்னரைவிட மிகச் சுலபமாக பெருந்தோட்ட மக்களும் தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமானதாக இருக்கும் அதேவேளை தொடர்ந்து தோட்டப்புறங்களுக்கு தனது சேவைகளை படிப்படியாக விஸ்தரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.இந்தச்சந்திப்பில் கலந்து கொண்ட வணபிதா பெனி யே.ச அவர்கள் மகஜரை பற்றி விளக்கிக்கூறியதோடு, பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றத்தின் வலையமைப்பு பற்றியும் கருத்து தெரிவித்தார்.
சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்த இச்சந்திப்பில் இறுதியில் அருட்தந்தை பெனி யே.ச அவர்களினால் கையெழுத்து மகஜர் நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறியிடம் கையளிக்கப்பட்டது. இச்சந்திப்பிற்கு பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றத்தின் வலையமைப்பு நிறுவன பிரதிநிதிகளான அருட்தந்தை பெனி யே.ச - ஊளுஊ, ஏ.சி.ஆர். ஜோன் - ஊளுஊ செல்வி கே யோகேஸ்வரி - ஐளுனு என்டன் - ஊளுஊ, கருனாகரன் - Pசுநுனுழு திருமதி விஜயலெட்சுமி ஜோசப் - யுளுஊனுழு மற்றும் பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் இரா. சந்திரமோகன் என்போர் பங்குப்பற்றினர்.
மேலும் இதேப்போன்றதொரு சந்திப்பும் மகஜர் கையளிப்பும் மே மாதம் 27 ஆம் திகதி கண்டி மாவட்டச் செயலாளருக்கு கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் திரு பெ. முத்துலிங்கம் மற்றும் பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஆர் ஜேர்க்கிம் தலைமையில் நடைபெற்றதோடு,
பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றத்தின் இணைப்பாளரும் அகில இலங்கை ஐக்கிய தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளருமான எஸ் முருகையா தலைமையில் 21.06.2011 ஆந் திகதி பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளருக்கும் கையளிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக