மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
செவ்வாய், 5 ஜூலை, 2011
ஹக்கலை தாவரத்தோட்டம்
சோ.ஸ்ரீதரன் -
இலங்கையின் இயற்கையின் அழகினைக் கண்டு களிப்பதற்கு மலையகப்பகுதிளை நாடி வருகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான நிலையைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றம் வெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகையும் மலையகப்பகுதிகளில் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக மலையகத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவமுள்ள இடங்களையும் இயற்கைக்கு எழிலூட்டும் இடங்களையும் பார்த்து ரசிப்பதில் மிகவும் ஆர்வம் செலுத்துகின்றனர். இந்த நிலையில் எமது சூழலில் உள்ள இந்த இடங்களின் முக்கியத்துவத்தினை அறிந்து நாமும் கண்டு களிக்கும் சந்தர்ப்பத்தினை இழந்து விடக்கூடாது.
அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள
ஹக்கலை தாவரத்தோட்டம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம். 1860 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்தத்தாவரப் பூங்கா நுவரெலியா நகரிலிருந்து வெலிமடைக்குச்செல்லும் பிரதான பாதையின் 9.6 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. இந்தத்தாவரத ;தோட்டத்தின் விஸ்தீரணம் 27.2 ஹெக்டயர் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1670 மீற்றர் உயரமுள்ள இந்தத்தாவரத் தோட்டத்தில் உள்ள ஹக்கலை குன்றின் உயரம் 2000 மீற்றராகும்.
இங்கு பல வகையான பூக்கள் என்றும் பூத்துக்குலுங்கும் அழகோ கொள்ளை அழகு. அத்துடன் றோசாத்தோட்டம் ,குன்றுத்தோட்டம் ,பன்னத்தோட்டம் ,ஜப்பான் தோட்டம் ,நாற்றுமேடை ,பூஞ்செடி விற்பனை நிலையம் ,சுற்றுலா விடுதி உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
பொழுதைப்பயனுள்ள முறையில் களிப்பதற்கு ஹக்கலை தாவரவியல் தோட்டத்திற்கு விஜயம் செய்யுங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக