அட்டன் செனன் தோட்டத்தில் வித்தியாசமான முகத்தோற்றத்தில் வண்ணத்துப்பூச்சி ஒன்றை தோட்ட மக்கள் இனங்கண்டுள்ளனர். அட்டன் செனன் தோட்டத்தில் வசிக்கும் மருதமுத்து சுப்பையா வீட்டில் தற்போத அந்தப் பூச்சி உள்ளது.
சுப்பையாவின் மனைவி கடந்த வெள்ளிக்கிழமைக் காலை வீட்டில் உடைகளை கழுவி உலர்த்துவதற்கு வெளியில் வந்த பொழுது கூரையில் வித்தியாசமான பூச்சியொன்று இருப்பதை அவதானித்து கணவரிடம் கூறியுள்ளார். இந்தப்பூச்சித் தொடர்பாக தோட்டத்தின் கோவில் குருக்களிடம் கேட்ட போது அவர் ஆஞ்சநேயர் முகத்துடன் கூடிய வண்ணத்து பூச்சியொன்று கூறி வீட்டின் சுவாமி படங்களின் முன் வைக்குமாறு கூறியுள்ளார். இந்த வண்ணத்து பூச்சியின் தலைப்பகுதி ஆஞ்சநேயரின் முகம் போன்று அமைந்துள்ளது.எனினும் இந்தப்பூச்சி வீட்டை விட்டு செல்லாமல் அவ்விடத்திலேயே உள்ளதாக வீ;டார் தெரிவிக்கின்றனர். அதிகளவிலான மக்கள் வண்ணத்துப் பூச்சியைப் பார்வையிட வருவதாக அவர் தெரிவித்தார். மற்றவர்களுக்கு தெளிவாக காட்ட வண்ணத்து பூச்சை பூவுடன் அவர் கையில் எடுத்து வெளியில் கொண்டு வந்த பொழுதும் அது பறக்காமல் அவரின் கையிலேயே இருந்தது.