மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
வியாழன், 29 ஜூலை, 2010
நுவரெலியா நானுஓயாவில் நிலம் தாழ்ந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தற்காலிக இருப்பிடங்களில் வாழ்கின்றனர் : வி.இராதாகிருஷ்ணன் எம்.பி
நுவரெலியா மாவட்டம் நானுஓயா டெஸ்போர்ட் தோட்டத்தில் இந்த மாதம் 7 ஆம் திகதி நிலம் திடீரென தாழ்ந்ததில் நான்கு லயன் குடியிருப்புக்கள் சேதத்துக்கு உள்ளாகின. இந்தக்குடியிருப்புக்களில் வாழந்து வந்த 150 குடும்பங்களைச்சேர்ந்த 600 பேர் தற்போது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடில்களிலும் தோட்ட ஆலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நானுஓயா டெஸ்போர்ட் தோட்டப்பகுதியில் நிலம் தாழந்தத்தில் தோட்டக்குடியிருப்புக்களின் கட்டிடச்சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டதால் இந்தக் குடியிருப்பில் வாழந்தவர்கள் உடனடியாக அப்பறப்படுத்தப்பட்டனர்.
எனினும் பாதிப்பு ஏற்பட்டு பல வாரங்கள் கடந்துள்ள போதும் இதுவரை இவர்களுக்கு உரிய மாற்று குடியிருப்புக்கள் இதுவரை அமைத்துக்கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் நிலைமைகளை ஆராய்ந்ததன் பின்பு பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்கவை இன்று 29 ஆம் திகதி சந்தித்து இவ்விடயம் குறித்து அவரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் முழு விரபத்தினையும் தனக்கு விரைவில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சமரசிங்க தன்னிடம் கேட்டுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர்
வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தகவல் - படங்கள் : நுவரெலியா சூரியன் தியாகு
புதன், 28 ஜூலை, 2010
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழி அமுலாக்கல் திருப்தியில்லை : உதயகுமார்
தமிழ் மக்கள் செறிந்தது வாழுகின்ற நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களில் அரச கரும மொழியான தமிழ் மொழி உரியவகையில் அமுல் படுத்தப்படாத காரணத்தினால் தமிழ் பேசும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களைத் தொடர்ந்து எதிர்நோக்கி வருவதால் இவ்விடயம் குறித்து பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம் .உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :
நுவரெலியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் ,கல்விப்பணிமனைகள் ,பிரதேச செயலகங்கள் , வைத்தியசாலைகள் ,தொழிற்திணைக்கள பணிமனைகள் ,நீதிமன்றங்கள் உட்பட பல்வேறு அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கல் உரியவகையில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் தமிழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குக் கடந்த பல வருடங்களாக உள்ளாகி வருகின்றனர். தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேச செயலகப்பிரிவுகளில் அரசகரும மொழியான தமிழ் மொழி உரியவகையில் அமுல் படுத்தப்பட வேண்டுமென அரசாங்கத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள போதும் இந்த அமுல் படுத்தல் இதுவரை நடை முறைக்கு வரவில்லை. குறிப்பிட்ட அரச நிறுவனங்களில் தமிழ் மொழியில் சேவையாற்றக்கூடிய உத்தியோகஸ்தர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதால் இத்தைய நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கல் உரிவகையில் மேற்கொள்ள முடியாத நிலையிலுள்ளதாக அறிவிக்கப்படுகின்ற போதும் தமிழ் உத்தியோகஸ்தர்கள் போதுமானதாக உள்ள அரச நிறுவனங்களில் கூட தமிழ் மொழி அமுலாக்கப்படுவதில் அசமந்தப்போக்குக் கடைப்பிடிப்பதானது விசனத்துக்குரிய விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில் அரச நிறுவனங்களில் தமிழ் ,சிங்கள மக்களின் நலன் கருதி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட சமூகத்தொடர்பாடல் வசதியளிப்பாளர் நியமனங்கள் கூட தற்போது வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் இன்று பெருந்தோட்டப்பகுதியில் படித்து விட்டு தொழில் வாய்ப்பின்றி ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் உள்ளனர்.இவர்களுக்கு அரசகரும மொழி தொடர்பான பயிற்சிகள் மற்றும் ஏனைய பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு உரிய நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் .இவ்வாறான நியமனங்கள் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கலைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் . இவ்விடயத்தினை உரிய தரப்பினர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
செவ்வாய், 27 ஜூலை, 2010
கண்டி இந்திய உதவி தூதரகத்தின் அனுசரணையுடன் தோட்டப்பகுதி இளைஞர் யுவதிகளுக்குத் தொழிற்பயிற்சி
நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் உரிய தொழிற்பயிற்சியற்று வேலையின்றி இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு கண்டியிலுள்ள இந்திய உதவி தூதரகத்தின் ஊடாக தொழிற்பயிற்சி மற்றும் கணனி பயிற்சி ஒன்றைப்பெற்றுக்கொடுப்பதற்காக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் நநடவடிக்கை எடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் கண்டி இந்திய உதவி தூதுவரிடம் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டார் .இந்தப் பேச்சுவார்த்தையின் பயனாக நுவரெலியா மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி விண்ணப்பப்படிவங்களை மத்திய மாகாணசபை
முரளிரகுநாதன் கண்டி இந்திய உதவி தூதுவரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஞாயிறு, 25 ஜூலை, 2010
தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதும் பெருந்தோட்டத்துறையைப் பாதுகாப்பதும் சவாலான விடயங்களாகும்; முதலாளிமார் சம்மேளனத்தின் ஆலோசகர் ஸ்ரீ
இலங்கையில் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது பெரும் சவாலாகவே இருக்கின்றது என்று இலங்கைப் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஆலோசகர் எஸ்.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.
பெருந்தோட்டத்தொழிற்துறையின் இன்றைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிப்பதற்காக நுவரெலியாவிலுள்ள பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிலையக்கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஹப்புகஸ்தென்ன மற்றும் உடபுசல்லாவை பெருந்தோட்டக்கம்பனிகளின் இயக்குநரும் நிறைவேற்று அதிகாரியுமான தயான்மடவல பெருந்தோட்ட உரிமையாளர் ஒன்றியத்தின் தலைவர் தமிந்த பெரேரா ,காவத்தை பெருந்தோட்டக்கம்பனியின் இயக்குநரும் நிறைவேற்று அதிகாரியுமான ரொசான் ராஜதுரை ,பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் சுகாதார மற்றம் மனிதவள அபிவிருத்தி பிரிவின் இயக்குநர் டொக்கடர் ரவி நாணயக்கார ஆகியோர் கலந்து உரையாற்றினர்.
அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது : இலங்கையின் பெருந்தோட்டத்துறையானது சம்மேளனங்களின் தலையீடற்ற துறை ,தொழிற்சங்கங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கின்ற துறை ,கூட்டுப்பேரம் பேசுதலின் அடிப்படையிலான உடன்படிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் துறையாகும். 1998 ஆம் ஆண்டு முதல் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்களுக்குமிடையில் மேற்கொள்ளப்படுகின்ற கூட்டுடன்படிக்கையின் மூலமாக தோட்டத்தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கும் முறை அமுல் படுத்தப்படுகின்றது. இந்த உடன்படிக்கையின் மூலமாக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயமும் ஏனைய சலுகைகள் தொடர்பான விடயங்களும் உறுதி செய்யப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தின் மூலமாக தோட்டத்தொழிலாளர்களின் நாளொன்றுக்கான சம்பளம் 405 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் படி அடிப்படைச்சம்பளமாக 285 ரூபாவும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளாக நிபந்தனைக்கு உட்பட்டதாக 30 ரூபாவும் 90 ரூபாவும் வழங்கப்படுகின்றது. மேலும் தோட்டத்தொழிலாளியின் மாதாந்த வருமானத்திற்கு மேலதிகமாக மாதாந்தம் 1500 ரூபா சலுகையை அனுபவிக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதும் அவர்களை வறுமை நிலையிலிருந்து மீட்பதும் பெரும் சவாலாகவே உள்ளது. எனினும் இலங்கையின் பெருந்தோட்டத்துறையைப் பாதுகாப்பது அனைத்துத்தரப்பினரதும் கடப்பாடாகும்.
சனி, 24 ஜூலை, 2010
கழுத்தில் கத்தி வெட்டுக்கு உள்ளாகிய ஒருவர் உயிரிழப்பு : மஸ்கெலியாவில் சம்பவம்
நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரவுன்ஸ்வீக் மொட்டிங்ஹோம் தோட்டத்தில் நேற்று 23 ஆம் திகதி இரவு இடம் பெற்ற சம்பவமொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் தேவம் ஞானமூர்த்தி என்பவராவார். 38 வயதுடைய இவர் திருமாணமானவர். எட்டு வயதில் மகன் ஒருவன் உள்ளான்.
இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :
கொலை செய்யப்பட்ட தேவம் ஞானமூர்த்திக்கும் அவரின் அயல் வீட்டுக்காரரான ஜோன் சுந்தரத்திற்கும் ஏற்பட்ட தனிப்பட்டத் தகராறு ஒன்றின் காரணமாக ஆத்திரத்துக்கு உள்ளான ஜோன் சுந்தரம் என்ற குடும்பஸ்தர் கவ்வாத்து கத்தி என்று சொல்லப்படுகின்ற கத்தியொன்றினால் தேவம் ஞானமூர்த்தியின் கழுத்துப்பகுதியில் வெட்டியதைத்தொடர்ந்து அதிகம் குருதி வெளியேறிய நிலையில் வெட்டுண்டவர் உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவம் 23 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. கழுத்தை வெட்டியவர் உடனடியாக தலைமறைவாகிய போதும் மஸ்கெலியா பொலிஸார் துரிதமாக செயற்பட்டதன் காரணமாக சந்தேக நபரை இன்று காலை செய்துள்ளனர். இந்த நிலையில் கொலைச்சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு வருகைத்தந்த அட்டன் நீதிமன்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டார் அத்துடன் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்தோட்டப்பகுதி மாணவர்களின் கல்வி நிலையை முன்னேற்றுவது தொடர்பான அமெரிக்கப்பல்கலைக்கழக மாணவனின் ஆய்வு அறிக்கை
பெருந்தோட்டப் பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியும்; பெற்றோர்களின் பங்களிப்பும் என்ற ஆய்வு அறிக்கையை மலையகக்கல்வித்துறை சார்ந்தவர்கள் முன்னிலையில் முன்வைத்து அங்கீகாரம் பெறுவதற்கான செயலமர்வொன்று நேற்று 22 ஆம் திகதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை அட்டன் சீடா வளநிலையத்தில் இடம் பெற்றது. மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்தச்செயலமர்விற்கு மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் திருமதி.அனுஷியா சிவராஜா இந்த அமைச்சின் செயலாளர் திருமதி ஷிராணி வீரக்கோன் ,அமெரிக்காவிலுள்ள டுலேன் பல்கலைக்கழகத்தின் பேராசியர் சமரசிங்ஹ ,மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சின் ஆலோசகர் எல்கடுவ ,ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தவரான அமெரிக்கா டுலேன் பல்கலைக்கழகத்தின் மாணவன் மைக்கல் போல் அட்டன் சீடா தகவல் தொழினுட்ப நிலையத்தின் பொறுப்பாளர் எம்.விஜயானந்தன்ஆகியோரும் மத்திய மாகாணத்தைச்சேர்ந்த தமிழ்ப்பிரிவின் கல்வி அதிகாரிகள் ,தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ,பிரதேச அரசியல்வாதிகள் உட்பட கல்வித்துறைசார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்ட முக்கியமான சில விடயங்கள்
1. பெருந்தோட்டப்பகுதியில் வாழுகின்ற மக்களின் வாழ்வியல் சூழ்நிலை ,உட்கட்டமைப்பு
உட்கட்டமைப்புக்குறைப்பாடுகள் , பொருளாதார தாழ்நிலைமை ,வறுமை ,போஷாக்குக்குறைப்பாடு ,பெரும்பாலான தேவைகளுக்கு தோட்ட நிருவாகங்களை நம்பியிருத்தல் ,சமூக மூடபழக்கவழக்கங்கள் போன்ற காரணிகள் பெருந்தோட்டப்பகுதி மாணவர்களின் கல்வியையும் பாதிக்கின்றது.
2. பெருந்தோட்டப்பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவுக்கும் சிரேஷ்ட இடைநிலைப்பிரிவுக்குமிடையிலான இடைநிலைப்பிரிவில் மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்தல் ,இந்தப்பிரிவிலுள்ள வகுப்புக்களின் மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள்
ஓரிலக்கை நோக்கி முன்னெடுப்பதிலுள்ள இடர்பாடுகள் அதிகமாயிருத்தல்.
3. பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளிலிருந்து இடை விலகுகின்ற மாணவர்கள் வேலையுலகிற்கு தேர்ச்சியற்ற நிலையில் பல்வேறு தொழிலுக்குச்செல்வதால் மனரீதியான முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
4. பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகள் பெரும்பாலானவை சமூகத்தொடர்பாடல் குறைந்த நிலையிலிருப்பதால் இந்தப்பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி குறைவாகயிருப்பதையும் சமூகத்தொடர்பால் அதிகமாக காணப்படுகின்ற பாடசாலைகளில் கல்வி அடைவு மட்டம் உயர்வாக காணப்படுகின்றமை .பொதுவாக பாடசாலை அபிவிருத்திச்சபைகள் ,பழைய மாணவர்சங்கங்கள் என்பன பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளைப்பொறுத்த வரையில் கூடிக்கலைகின்ற அமைப்புக்களாக காணப்படுகின்றன.
5. பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளில் தரம் ஐந்து மாணவர்கள் எழுதுகின்ற பரீட்சைக்குக்காட்டுகின்ற அக்கறை இடைநிலை மாணவர்களிடத்திலும் சாதாரணதரப்பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களிடத்திலும் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிடத்திலும் பெற்றோர்களுக்கும் ஏனையவர்களுக்கும் அதிக அக்கறை காணப்படாமை.
6. பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் 87 வீதமானவை ஆரம்ப ,இடைநிலை வகுப்புக்களைக்கொண்ட பாடசாலைகளாக இருக்கின்ற போது 13 வீதமான பாடசாலைகளே உயர்தர வகுப்புக்களைக்கொண்டுள்ளன.இதனால் பெருந்தோட்டப்பகுதிகளிலிருந்து க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத்தோற்றுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றமை வெளிப்படையாகும். சாதாரணதரப்பரீட்சையில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரக்கல்வியைத் தொடருகின்ற போதே பல்கலைக்கழகங்களுக்குச்செல்லும் பெருந்தோட்டப்பகுதி மாணவர்களின் தொகையை அதிகரிக்க முடியும் .தற்போது பெருந்தோட்டப்பகுதிகளிலிருந்து உயர்தரப்பரீட்சைக்குத்தோற்றுகின்றவர்களின் 5 வீதமானவர்களே பல்கலைக்கழகங்களுக்குச்செல்கின்றனர். அதாவது 100 பேர் பரீட்சைக்குத்தோற்றினால் 5 பேர் தான் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்றனர். பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அனுமதியை 10 தொடக்கம் 12 வீதமானவர்கள் பெறுகின்றனர். எனவே உயர்தரப்பரீட்சைக்குத்தோற்றுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போது பல்கலைக்கழகங்களுக்குச்செல்லுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்படும்
இந்த ஆய்வறிக்கையின் மூலம் மலையகத்தமிழ் மாணவர்களின் கல்வித்துறை வளர்ச்சிக்குப்பெற்றோரின் பங்களிப்பு இன்றியமையாதது. பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையிலான இடைநிலைப்பிரிவில் ஏற்படுகின்ற மாணவர் இடைவிலகலைக்கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பெருந்தோட்டப்பகுதி மாணவர்களிடத்தில் இடைநிலைக்கல்வியை மேப்படுத்துவது தொடர்பான பரிகார திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் ஆகிய முக்கிய முடிவுகள் வெளிக்கொணரப்பட்டன. இந்த முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு செயற்றிட்டமொன்றினை தயாரித்து அதனை முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் அமுல்படுத்தும் வகையில் அரசாங்கம் ,மலையக அரசியல் தலைமைகள் ,அரசசார்பற்ற நிறுவனங்கள் ,வெளிநாட்டு அமைப்புக்கள் என்பனவற்றின் பங்களிப்பினைக் கோருவதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.
வாழைமரத்தில் பல பூக்கள் : நுவரெலியாவில் அதிசயம்
நுவரெலியா மாவட்டம் நானுஒயா வங்கி ஓய கீழ்ப்பிரிவு தோட்டத்தைச்சேர்ந்த ராமசாமி என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் அதிசய வாழை மரமொன்று காணப்படுகின்றது. இந்த வாழை மரத்தின் சுமார் 25 வாழைப்பூக்கள் காணப்படுகின்றன. பொதுவாக வாழை மரமொன்றில் ஒரு பூ மாத்திரமே பூக்கும் என்பதே இயற்கையாகும். ஆனால் இந்த வாழைமரம் பல பூக்களுடன் இருப்பதைப்பார்த்து பிரதேச மக்கள் வியப்பிலாழ்ந்துள்ளனர்.
தகவலும் படங்களும் : நுவரெலியா சூரியன் தியாகு
வெள்ளி, 23 ஜூலை, 2010
புசல்லாவைப்பிரதேசத்தில் மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் தொடர்கின்றன : பிரதேச மக்கள் மனக்கிலேசத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மலையகத்தில் பாடசாலை மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் யார் என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது.இவ்வாறான தற்கொலை சம்பவங்களுக்குப் பாடசாலைகள் தான் காரணம் என்று ஒரு சாரார் கூறிக்கொண்டு உண்மை நிலைமைகளை மறைக்கும் நிலைமை மலையகத்தில் ஏற்பட்டுள்ளது.பாடசாலை மாணவிகள் அல்லது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அதற்கான பரிகாரங்களை மேற்கொள்வது இன்றைய தேவையாக உள்ளது. குறிப்பாக புசல்லாவை பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதக்காலத்துக்குள் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளில் ஒருவர் தனக்குத்தானே தீயிட்டுக்கொண்டும் மேலும் இருவர் கழுத்தில் தூக்கிட்டுக்கொண்டும் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை இதே பிரதேசத்தைச்சேர்ந்த மேலுமொரு மாணவி நஞ்சருந்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளது.இவ்வாறான சம்பவங்கள் பாடசாலைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தான் காரணமென்று சில தரப்புக்கள் நியாமம் கூறி சமூகத்தின் பார்வையைத்திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றஞ்சாட்டும் நிலவுகின்றது. ஆனால் நாம் மறுபக்கம் இந்தச்சம்பவங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மாணவிகளின் குடும்பச்சூழலும் சமூகச்சூழலும் இந்த மாணவிகளின் தற்கொலைக்கும் தற்கொலை முயற்சிகளுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது.
அண்மையில் வெளியாகிய க.பொ.த .சாதாரணதரப்பரீட்சையில் திருப்தியான பெறுபேறு வராத காரணத்தினால் விரக்தியடைந்த புசல்லாவைப்பிரதேச மாணவி சஹானா தனக்குத்தானே தீயிட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டமையானது பிரதேச மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .இதன் போது அனைத்துத்தரப்பினரும் இந்த மாணவியின் தற்கொலைக்கு பாடசாலைதான் காரணம் என்று விரல் நீண்டத்தொடங்கியது. ஆனால் இந்த தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து இதுவரை ஆராயப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையில் கடந்த 15 ஆம் திகதி இதே பாடசாலையசை;சேர்ந்த மாணவி டில்ருக்ஷி; கடந்த மூன்று மாதகாலமாக பாடசாலைக்கு வருகைத்தராமல் திடீரென கடந்த வாரம் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.பாடசாலைக்கு நீண்டகாலம் வருகைத்தராதது குறித்துப்பாடசாலை நிருவாகம் குறிப்பிட்ட மாணவியிடமும் பெற்றோரிடமும் விளக்கம் கேட்டுள்ளது. பாடசாலைக்கு நீண்டகாலம் மாணவர்கள் வருகைத்தரா விட்டால் அந்த மாணவர்களுக்குரிய கணிப்பீட்டு விடயங்களை மேற்கொள்வது ஆசிரியர்களுக்கு பல்வேறு அசௌகரியங்களை ஏற்படும். தற்போது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் குறித்து கல்வியமைச்சு பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறானதொரு நிலையில் நீண்டகாலம் பாடசாலைக்கு வருகைத்தராத மாணவர்களிடம் விளக்கம் கோருவதற்கு பாடசாலை நிருவாகத்திற்குப் பொறுப்பு உள்ளதென்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறானதொரு நிலையில் நீண்டகாலம் பாடசாலைக்குச் சமுகம் தராத மாணவியிடம் விளக்கம் கேட்டமையை எவ்விதத்திலும் குற்றமென்று கூற முடியாது.
எனினும் பாடசாலை நிருவாகத்தினால் இந்த விளக்கம் கேட்ட முறை குறிப்பிட்ட மாணவியின் மனநிலையையும் குடும்ப பின்னணியையும் அறிந்து கொண்ட விதத்தில் அமைந்துள்ளதா என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும். இந்த நிலையில் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாய் கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு வெளியாட்டுக்குப்பணிப்பெண்ணாக சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் தாயின் வீட்டுப்பொறுப்புக்கள் இந்த மாணவியின் மீது சுமத்தப்பட்டிருக்கலாம்.இதனால் இந்த மாணவிக்குப்பாடசாலைக்கு வர முடியாத சூழு;நிலையை ஏற்படுத்தியிருக்கலாம். இவ்வாறான நிலைமைகளை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த மாணவியின் தற்கொலைக்குப்பாடசாலை தான் காரணம் என்று கூறி குறிப்பிட்ட மாணவியின் தோட்டத்தைச்சேர்ந்த மக்கள் பாடசாலைக்கு முன்னால் போராட்டம் நடத்துவதற்கும் முற்பட்டுள்ளனர். இந்த நிலையில் இதே பிரதேசத்தில் பாடசாலைக்குச்சென்று படிக்க வேண்டும் என்ற அடம் பிடித்த பிள்ளைக்குத் தாய் மறுப்புத்தெரிவித்ததால் விரக்தி அடைந்த அந்த மாணவி நஞ்சருந்தி தற்கொலை செய்வதற்கு முற்பட்ட போதும் அவர் காப்பாற்றபட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடரக்கூடாதென்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த போது புசல்லாவைப் பிரதேசத்தில் மீண்டமொரு தமிழ் யுவதி தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது. புசல்லாவை பிளக்பொரஸ்ட் தோட்டத்தைச்சேர்ந்த 21 வயதுடைய பிரெம்ஐயா சாந்தி என்ற இளம் யுவதியே இவ்வாறு தூக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. புசல்லாவை பிரதேச பாடசாலை ஒன்றின் பழைய மாணவியான இவர் எதிர்வரும் உயர்தரப்பரீட்சைக்குப் பிரத்தியேகமாக தோற்றவுள்ள நிலையிலேயே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று 23 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் குறிப்பிட்ட யுவதியின் சகோதரியின் மகன் வீட்டுக்குச்சென்ற போது வீட்டின் கதவு மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.பிறகு அந்தக்கதவை திறந்து கொண்டு வீட்டினுள் சென்ற போது அந்த யுவதி; சேலை ஒன்றினால் கழுத்தில் சுறுக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். தற்போது இந்த யுவதியின் சடலத்தனை புசல்லாவை வகுக்கப்பிட்டிய வைத்தியசாலைக்குக்கொண்டு செல்லப்பட்டுள்ளது.இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புசல்லாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இந்த மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை .இவ்வாறானதொரு நிலையில் பாடசாலை மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஏதுவான காரணிகள் என்ன என்பதை மலையக சமூக ஆர்வலர்கள் கண்டறிய வேண்டும். அத்துடன் மாணவர்களின் ஒழுக்க விழும்பியங்களிலும் பொறுப்புணர்வுகளிம் அதிக அக்கறை செலுத்துகின்ற நிலைமை பாடசாலைக்கு மாத்திரம் பொறுப்பல்ல அவர்களின் பெற்றோர்களுக்கும் பங்குண்டு என்பதை நாம் புரிந்து கொள்ளதான் வேண்டும்
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தித்திட்டங்களில் பெருந்தோட்டப்பகுதி இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்பட வேண்டும் : அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்
நுவரெலியா மாவட்டத்தில் வாழுகின்ற தோட்டப்பகுதி மக்களையும் உள்வாங்கி;க்கொண்டு அந்த மக்களுக்குச் சிறந்த வகையில் சேவையாற்றும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டும் என்று இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் கால்நடை ,கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று 23 ஆம் திகதி நுவரெலியா மாவட்டச்செயலகத்தில் இடம் பெற்ற போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தக்குழுக்கூட்டத்தில் இ.தொ.கா.வின் தலைவரும் பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான முத்துசிவலிங்கம் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான நவீன்திசாநாயக்க ,வி.இராதாகிருஷ்ணன் ,இராஜதுரை ,ஜெ.ஸ்ரீரங்கா ஆகியோரும் அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக என்னை நியமித்த ஜனாதிபதி அவர்களுக்கு எனது முதற்கண் நன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் இடம் பெற்ற அபிவிருத்தித்திட்டங்களில் தோட்டப்பகுதி இளைஞர் யுவதிகள் உரிய வகையில் உள்வாங்கப்படாமையானது கவலைத்தரக்கூடிய விடயமாகும். எனவே எதிர்காலத்தில் இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித்திட்டங்களில் தோட்டப்பகுதி இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்பட வேண்டும்.அத்துடன் அரச பணிகளைத் தோட்ட மக்களிடத்திலும் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபட வேண்டும். இரண்டு மாதத்துக்கொரு முறை கூட்டப்படுகின்ற இந்த மாட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்திற்கு அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் கட்டாயம் சமுகமளித்திருக்க வேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் மக்களின் பிரச்சினைகள் உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் எதிர்வரும் கூட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தகவலும் படங்களும் : நுவரெலியா சூரியன் தியாகு
வியாழன், 22 ஜூலை, 2010
இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளர் கணபதி கனகராஜ் இ.தொ.கா.வுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் மற்றும் இந்த முன்னணியின் நிதிச்செயலாளரும் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.சிவசுந்தரம் ஆகியோர் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸீடன் இணைந்து கொள்வதற்கான மறைமுகப்பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருவதாக மலையக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன. பெரும்பாலும் இவர்கள் இருவரும் இன்று 22 ஆம் திகதி காலை 10 மணிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கொட்டகலை காங்கிரஸ் தொழினுட்ப நிலையத்தில் இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய ,சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்பு உத்தியோகப்பூர்வமாக இணையவுள்ளனர் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதன், 21 ஜூலை, 2010
அட்டன் பொஸ்கோ கல்லூரிக்கு விசேடத்தேவைக்குரிய மாணவர்களுக்கான வள அறை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் கல்வி வலயத்தில் மாத்திரே விசேடத்தேவைக்குரிய மாணவர்களுக்கான பிரிவு ஒன்று சிறப்பாக செயற்படுகின்றது என்று அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜ் தெரிவித்தார். அட்டன் பொஸ்கோ கல்லூரியில்; கல்விகற்கின்ற விசேட தேவைக்குரிய மாணவர்களின் நலன் கருதி அட்டன் நகரின் பிரபல வர்த்தகர் டி.கே.வீரதுங்க அவர்களினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத்தினை இன்று திறந்து வைத்துப்பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அட்டன் கல்வி வலயத்தில் பல பாடசாலைகளில் விசேடத்தேவைக்குரிய மாணவர்களுக்கென்று
வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த வகுப்புகளுக்கு விசேடத்தேவைக்குரிய தமது பிள்ளைகளை அனுப்புவதில் பெற்றோர் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் பொஸ்கோ கல்லூரியின் விசேடத்தேவைக்குரிய மாணவர்கள் சிறந்த முறையில் செயற்படுகின்ற வகையில் அட்டன் நகர வர்த்தகர் டி.கே.வீரதுங்கவின் நிதியுதவியினால் சிறந்த வகுப்பறை கட்டிடமொன்று கிடைக்கப்பெற்றமைக்காக அட்டன் கல்வி வலயத்தின் சார்பாக அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அட்டன் பொஸ்கோ கல்லூரியில் செயற்படுகின்ற விசேட தேவைக்குரிய மாணவர்களின் நலன் கருதி அட்டன் நகரின் பிரபல வர்த்தகர் டி.கே.வீரதுங்க அவர்களினால் வகுப்பறை கட்டிடமொன்று .இதன் திறப்பு விழா இன்று இடம் பெற்ற போது வர்த்தகர் டி.கே.வீரதுங்க ,அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜ் ,அட்டன் கல்வி வலயத்தின் விசேடத்தேவைப்பிரிவு பாடத்துறையின் உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி .டோசன் ,பாடசாலை அதிபர் என்.எஸ்.குரூஸ் ஆகியோரை மாணவர்கள் வரவேற்பதையும் வகுப்பறையை அதிதிகள் பார்வையிடுவதையும் விசேடத்தேவைக்குரிய வகுப்பின் மாணவர்களையும் படங்களில் காணலாம்.
மணிச்செய்திகள்
மலையக மாணவர் கல்வித்தொடர்பான செயலமர்வு
பெருந்தோட்டப் பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு என்ற தொனிப்பொருளிலான செயலமர்வொன்று் 22 ஆம் திகதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 12.30 மணிவரை அட்டன் சீடா வளநிலையத்தில் இடம் பெறவுள்ளது. மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியரமச்சின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இந்தச்செயலமர்விற்கு மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் திருமதி.அனுஷியா சிவராஜா மற்றும் இந்த அமைச்சின் செயலாளர் திருமதி ஷிராணி வீரக்கோன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கால்நடை அபிவிருத்தி , கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
மலையக இளைஞர் யுவதிகளுக்குச் சுயத்தொழில் வாய்ப்பு
மலையகப்பெருந்தோட்டப்பகுதியில் வாழுகின்ற இளைஞர் யுவதிகளுக்குச் சுயத்தொழில் பயிற்சிகளைக் கண்டி இந்திய உதவி தூதரகத்தின் ஏற்பாட்டில் வழங்குவதற்கான நடவடிக்கை ஒன்றில் ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் மேற்கொண்டு வருகின்றார். கண்டியிலுள்ள இந்திய உதவி தூதுவருடனான பேச்சுவார்த்தையைத்தொடர்ந்தே இந்த நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டு வருகின்றார் இதற்கேற்ப தரம் 9 வரை கல்வி கற்றவர்களுக்கான சுயத்தொழில் பயிற்சியினை வழங்குவதற்கும் க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரம் வரை கல்விக்கற்றவர்களுக்கு கணனி பயிற்சிகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பயிற்சி நெறிகளில் பங்குபற்ற விரும்புகின்றவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்பதாக சம்பந்தப்பட்ட இளைஞர் யுவதிகள் தத்தமது சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவங்களை ஜனநாயத் தொழிலாளர் காங்கிரஸின் அட்டன் மற்றும் தலவாக்கலை பணிமனைகளில் ஒப்படைக்குமாறு மத்திய மாகாணசபையின் உறுப்பினர் முரளி ரகுநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அட்டன் வலய ஆங்கில மொழித்தினப்போட்டிகள்
அட்டன் கல்வி வலய மட்ட ஆங்கில மொழித்தினப்போட்டிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை அட்டன் பொஸ்கோ கல்லூரியில் இடம் பெறவுள்ளது. இந்தப்போட்டிகளில் அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட மஸ்கெலியா ,நோர்வூட் அட்டன் ,கினிகத்தேனை ஆகிய கல்விக்கோட்டங்களைச்சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர் என்று அட்டன் கல்வி வலயத்தின் ஆங்கில மொழிப்பாடத்திற்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் அருளாந்தராஜா தெரிவித்தார்.
அட்டன் நகர அபிவிருத்திக்கு அமைச்சரிடம் நிதிகோரல்
அட்டன் - டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மேலும் பல உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானிடம் சுமார் 20 மில்லியன் ரூபா நிதியைத் தான் கோரியுள்ளதாக அட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார். தரவளை ,குடாஓயா ,காமினிபுர போன்ற பகுதிகளில் ஏற்படுத்தப்படவுள்ள சில உட்கட்டமைப்புத்திட்டங்களுக்கே இந்த நிதியைக்கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு என்ற தொனிப்பொருளிலான செயலமர்வொன்று் 22 ஆம் திகதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 12.30 மணிவரை அட்டன் சீடா வளநிலையத்தில் இடம் பெறவுள்ளது. மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியரமச்சின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இந்தச்செயலமர்விற்கு மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் திருமதி.அனுஷியா சிவராஜா மற்றும் இந்த அமைச்சின் செயலாளர் திருமதி ஷிராணி வீரக்கோன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கால்நடை அபிவிருத்தி , கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
மலையக இளைஞர் யுவதிகளுக்குச் சுயத்தொழில் வாய்ப்பு
மலையகப்பெருந்தோட்டப்பகுதியில் வாழுகின்ற இளைஞர் யுவதிகளுக்குச் சுயத்தொழில் பயிற்சிகளைக் கண்டி இந்திய உதவி தூதரகத்தின் ஏற்பாட்டில் வழங்குவதற்கான நடவடிக்கை ஒன்றில் ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் மேற்கொண்டு வருகின்றார். கண்டியிலுள்ள இந்திய உதவி தூதுவருடனான பேச்சுவார்த்தையைத்தொடர்ந்தே இந்த நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டு வருகின்றார் இதற்கேற்ப தரம் 9 வரை கல்வி கற்றவர்களுக்கான சுயத்தொழில் பயிற்சியினை வழங்குவதற்கும் க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரம் வரை கல்விக்கற்றவர்களுக்கு கணனி பயிற்சிகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பயிற்சி நெறிகளில் பங்குபற்ற விரும்புகின்றவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்பதாக சம்பந்தப்பட்ட இளைஞர் யுவதிகள் தத்தமது சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவங்களை ஜனநாயத் தொழிலாளர் காங்கிரஸின் அட்டன் மற்றும் தலவாக்கலை பணிமனைகளில் ஒப்படைக்குமாறு மத்திய மாகாணசபையின் உறுப்பினர் முரளி ரகுநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அட்டன் வலய ஆங்கில மொழித்தினப்போட்டிகள்
அட்டன் கல்வி வலய மட்ட ஆங்கில மொழித்தினப்போட்டிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை அட்டன் பொஸ்கோ கல்லூரியில் இடம் பெறவுள்ளது. இந்தப்போட்டிகளில் அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட மஸ்கெலியா ,நோர்வூட் அட்டன் ,கினிகத்தேனை ஆகிய கல்விக்கோட்டங்களைச்சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர் என்று அட்டன் கல்வி வலயத்தின் ஆங்கில மொழிப்பாடத்திற்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் அருளாந்தராஜா தெரிவித்தார்.
அட்டன் நகர அபிவிருத்திக்கு அமைச்சரிடம் நிதிகோரல்
அட்டன் - டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மேலும் பல உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானிடம் சுமார் 20 மில்லியன் ரூபா நிதியைத் தான் கோரியுள்ளதாக அட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார். தரவளை ,குடாஓயா ,காமினிபுர போன்ற பகுதிகளில் ஏற்படுத்தப்படவுள்ள சில உட்கட்டமைப்புத்திட்டங்களுக்கே இந்த நிதியைக்கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செவ்வாய், 20 ஜூலை, 2010
அட்டன் நகரசபை பகுதிக்குள் மண்சரிவு அபாயம் : நகரசபைத்தலைவர் அறிவிப்பு
அறிவிப்புொடர்ச்சியாக அடைமழைப்பெய்து வருவதால் அட்டன் - டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் அட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார். அட்டன் நகருக்கு அண்மையிலுள்ள காமினிபுரம் ,வில்புரட் புரம் ,சமனலகம ஆகிய கிராமப்பகுதிகளில் பல இடங்களில் ஏற்கனவே மண்சரிவுகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்படின் இந்தக்கிராமப்பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ளதால் மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் வாழுகின்றவர்கள் மாற்றிடங்களுக்கு இடம் பெயர்ந்து கொள்ள வேண்டும். மேலும் மண்சரிவு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக நகரசபையின் கவனத்திற்குக் கொண்டு வருமாறும் கேட்டுக்கொன்கின்றேன் என்று அட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார்.
மத்திய மாகாணசுகாதார அமைச்சர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம்
ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதனின் வேண்டுகேளுக்கேற்ப மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகளை கண்டறிவதற்காக மத்திய மாகாணசுகதார அமைச்சர் சுனில் அமரதுங்க அண்மையில் இந்த வைத்தியசாலைக்கு நேரடியாக விஜயம் செய்த போது சுகாதர அமைச்சர் நோயாளி ஒருவருடன் உரையாடுவதையும் அதன் பின்பு இடம் பெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் கருத்துரை வழங்குவதையும் அருகில் மத்திய மாகாணசுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க ,மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் உட்பட பலர் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.
திங்கள், 19 ஜூலை, 2010
இலங்கைத்தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் முன்வாரீர் : அமைச்சர் கெஹலிய அழைப்பு
போருக்குப்பின்னரான இலங்கைத்தேசத்தைப் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்குச் சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்ல தெரிவித்தார்
கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக கடந்த இன்று ஆம் திகதி கண்டி சுவிஸ் விருந்தகத்தில் இடம் பெற்ற செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சினாலும் அரசாங்க தகவல் திணைக்களத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச்செயலமர்வில் போருக்குப்பின்னரான சர்வதேச சவால்கள் என்ற தலைப்பிலும்; மக்கள் சபையின் மூலமாக மக்களின் பங்களிப்பினை கட்டியெழுப்புவோம் என்ற தலைப்பிலும்; விரிவுரைகள் இடம் பெற்றன. இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரதம பணிப்பாளர்; பேராசிரியர்.ஆரியரட்ன அத்துகல ,மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் துறை அமைச்சின் செயலாளர் டப்ளியூ .பி.கனேகல ,பேராசிரியர் லக்ஸ்ரீபெர்னாண்டோ ,பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தம்ம திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரமான பயங்கரவாதிகள் என்று கருதப்பட்டவர்களுடனான யுத்தத்தில் நாம் இன்று வெற்றிப்பெற்றுள்ளோம்.எமது நாட்டு மக்களின் 30 வருட கால கனவினை நனவாக்கிக்கொண்டுள்ளோம். இன்று நாம் உலகத்திற்கு முன்பு கம்பீரமாக நிற்கின்றோம். யுத்தத்தின் மூலம் பயங்கரவாதத்தை வெற்றிக்கொண்ட நாம் சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதே இன்றைய முக்கிய பணியாகும். யுத்தத்தை வெற்றிக்கொண்ட எமது நாட்டின் தலைமைத்துவம் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காகவும் முன்னின்று செயற்படும். இதற்காக ஊடகவியலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். இந்த நாட்டின் ஊடகத்துறையின் வளர்ச்சிக்காக எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.ஊடகவியலாளர்கள் எனது நண்பர்கள் என்ற ரீதியில் அவர்களின் தேவையறிந்து சேவைசெய்வதற்கும் நான் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்.
ஞாயிறு, 18 ஜூலை, 2010
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை : மண்சரிவு அபாயம்
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டுமென நுவரெலியா மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட அட்டன் ,கினிகத்தேனை ,நோட்டன் ,மஸ்கெலியா ,வட்டவளை போன்ற பகுதிகளிலேயே மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தப்பிரதேசத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கினிகத்தேனை நகரிலுள்ள அம்பகமுவ பிரதேச சபை பணிமனைக்குச் செல்லும் பிரதான பாதையின் ஒரு பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.இந்தப் பாதையின் மன்திட்டொன்று சரிந்து அட்டன் - கினிகத்தேனை பிரதான பதையின் ஒருபகுதியில் விழுந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக பெய்து வருகின்ற அடைமழையினால் இந்த மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளிலும் நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் மேலும் உயர்வடைந்து வருகின்றது. காசல்ரீ ,மவுசாகலை ,கனியன் ,விமலசுரேந்திரபுர ,பொல்பிட்டிய போன்ற நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள லக்ஷபான ,டெவன் ,சென்கிளாயர் , றம்பொடை பான்ற நீர் வீழ்ச்சிகளிலும் நீர் பெருக்கம் ஏற்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.இதே வேளை நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதால் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட ஏனையவர்களும் தமது வழமையான தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படலாம்
கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் பெய்து வருகின்ற அடைமழையினால் இந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் இதன் வான்கதவுகளை எந்த நேரமும் திறந்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ்நிலைப்பகுதிகளிலும் ஆற்றோரங்களிலும் வாழுகின்றவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கொத்மலை நீர்த்தேக்கத்தின் பிரதான பொறியிலாளர் எல்.எம்.ஜி.விஜேசேகர அறிவித்துள்ளார். இதே வேளை நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலை நிலையைத்தொடர்ந்து காலை வேளையிலும் மாலை வேளையிலும் மேக மூட்டம் ஏற்படுவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வீதி போக்குவரத்தில் ஈடுபடவேண்டுமென நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
சனி, 17 ஜூலை, 2010
பதுளையைச் சேர்ந்த மலையகப்பெண் கொழும்பில் அடித்துக்கொலை பிரபா கணேசன் எம்பி பொலிஸ் விசாரணைகளைக் கண்காணிப்பு
பதுளை மாவட்டம், எல்ல, நமுனுகலை, கலுகல தோட்டம், கீழ்பிரிவை சார்ந்த வெள்ளசாமி சீதாராணி என்ற 44 வயதுடைய பெண் கொழும்பு புதுச்செட்டித்தெரு தொடர்மாடி வீடொன்றில் பணிப்பெண்னாக பணிபுரியும் வேளையில் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலே கடந்த செவ்வாய்கிழமை 13 ஆம் திகதி இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரும், அவரது மாமியாரும் கைதுசெய்யப்பட்டு, புதுகடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகளை ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும், மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதனும் கண்காணித்துவருகின்றார்கள் என்று ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதுச்செட்டித்தெரு தொடர்மாடி வீட்டில் கடந்த ஆறுமாத காலமாக இப்பெண் பணிபுரிந்த வேளையிலே இக்கொடூரச்சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் ஒரு திருட்டுச்சம்பவம் தொடர்பிலே எஜமானர்களால் இந்த பெண் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட இரத்த பெருக்கினால் மரணம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் சந்தேக நபர்களான ஷாகுல் ஹமீத் என்ற வீட்டு உரிமையாளரையும், அவரது மாமியாரான னோனா நஜீமா என்பவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேல் விசாரணைகள் தொடர்பிலே கொட்டாஞ்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி, கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதன் ஆகியோர் விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை நேரடியாக கண்காணித்து வருகின்றார்கள். கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்சமயம் கொழும்பு பிரேதச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை : மண்சரிவு அபாயம்
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டுமென நுவரெலியா மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட அட்டன் ,கினிகத்தேனை ,நோட்டன் ,மஸ்கெலியா ,வட்டவளை போன்ற பகுதிகளிலேயே மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தப்பிரதேசத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கினிகத்தேனை நகரிலுள்ள அம்பகமுவ பிரதேச சபை பணிமனைக்குச் செல்லும் பிரதான பாதையின் ஒரு பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.இந்தப் பாதையின் மன்திட்டொன்று சரிந்து அட்டன் - கினிகத்தேனை பிரதான பதையின் ஒருபகுதியில் விழுந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக பெய்து வருகின்ற அடைமழையினால் இந்த மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளிலும் நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் மேலும் உயர்வடைந்து வருகின்றது. காசல்ரீ ,மவுசாகலை ,கனியன் ,விமலசுரேந்திரபுர ,பொல்பிட்டிய போன்ற நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள லக்ஷபான ,டெவன் ,சென்கிளாயர் , றம்பொடை பான்ற நீர் வீழ்ச்சிகளிலும் நீர் பெருக்கம் ஏற்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.இதே வேளை நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதால் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட ஏனையவர்களும் தமது வழமையான தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
வெள்ளி, 16 ஜூலை, 2010
மலையகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தற்கொலைகள்
மலையகத்தில் அண்மைக்காலமாக தற்கொலை செய்துகொள்கின்ற எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பல்வேறு தரப்பினராலும் கவலைத்தெரிவிக்கப்படுகின்ற இந்தச்சந்தர்ப்பத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குறுகிய காலத்துக்குள் நான்கு பெண்களின் திடீர் தற்கொலையானது மலையகத்தின் பக்கம் சகலரினதும் கவனத்தினை ஈர்த்துள்ளது. ஏற்கனவே பொருளாதார துறையிலும் உட்கட்டமைப்பு உட்பட பல்வேறு வகையில் பின்தங்கிய சமூகமாக கருதப்படுகின்ற மலையகப்பெருந்தோட்டச்சமூகத்தில் தற்கொலை சம்பவங்களும் புதியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் மலையகத்தில் கடந்த 14 ஆம் 15 ஆம் திகதிகளில் இடம் பெற்ற வௌ;வேறு சந்தர்ப்பங்களில் பாடசாலை மாணவி உட்பட நான்கு பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் பொகவந்தலாவை பிரதேசததிலுள்ள வௌ;வேறு தோட்டங்களில் குறுகிய காலத்துக்குள் மூன்று மரணசம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை பொகவந்தலாவைப்பிரதேச மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று பெண்களில் இரண்டு பெண்களின் மரணங்கள் தற்கொலையா கொலையா என்பது குறித்த விசாரணைகள் இதுவரை முற்றுப்பெறவில்லை. இந்தச்சம்பவம் தொடர்பாகமேலும் தெரியவருவதாவது : பொகவந்தலாவை கியூ மேற்பிரிவு தோட்டத்தைச்சேர்ந்த 65 வயதுடைய ஆரோக்கியம்மாள் என்ற குடும்ப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று 14 ஆம் திகதி இரவு இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மேற்படி பெண் தனக்குத்தானே தீமூட்டிக்கொண்டதால் வீட்டுப்பகுதியிலிருந்து புகைக்கிளம்பி வருவதை அவதானித்த தோட்ட மக்கள் குறிப்பிட்ட இடத்திற்குச்சென்று அவதானித்த போதும் அந்தப்பெண் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையிலிருந்து குறிப்பிட்ட பெண்ணின் சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை மாவட்ட வைத்திய அதிகாரி ஜெயசூரிய தெரிவித்தார். இதேவேளை பொகவந்தலாவை ஜெபல்டன் டி.பி தோட்டப்பிரிவைச் சேர்ந்த 35 வயதுடைய புவனேஸ்வரி என்ற பெண்; 15 ஆம் திகதி காலை நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர் . குடும்ப பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென்று தெரிய வருகின்றது.இவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொகவந்தலாவை மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப்பட்டிருந்து. இந்த நிலையில் 15 ஆம் திகதி மாலை 3 மணியளவில் பொகவந்தலாவை குயினாத் தோட்டத்தைச்சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க யுவதியொருவர் கழுத்தில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இவரின் மரணத்திலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இந்த யுவதியின் சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. இந்த மூன்று மரண சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் பொகவந்தலாவைப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மூன்று மரணங்களில் தற்போதைய ஒரு மரணம் மாத்திரம் தற்கொலை என்று நிரூபிக்கப்டுள்ளது.ஏனைய இரண்டு மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த முடிவு சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கைக்குப்பிறகே தெரிய வரும்.
இவ்வாறானதொரு நிலையில் கண்டி மாவட்டம் புசல்லாவை சவுக்குமலைத்தோட்டத்தைச்சேர்ந்த புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியில் தரம் 11 இல் கல்விக்கற்கின்ற 16 வயது மாணவி ஒருவர் 15 ஆம் திகதி காலை; வேளையில் தனது வீட்டினுள் கழுத்தில் சுறுக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளi மலையக மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படவுதவி : புசல்லாவை திருஞானம்
நுவரெலியாவில் ஆயர்வேத மருத்துவ முகாம்
மத்திய மாகாண சமூக சேவைகள் அமைச்சின் அனுசரணையுடன் கடந்த 16 ஆம் திகதி நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று மத்திய மாகாண சபை உறுப்பினரும் தமிழ் சிங்கள கிராமிய பெண்கள் அமைப்பின் தலைவியுமான விமாலி கருணாரத்தன தலைமையில் இடம் பெற்றது.
இந்த மருத்துவ முகாம் நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்;. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் சிலருக்கு முச்சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து கேட்டறியப்பட்டன.
தகவல் : நுவரெலியா சூரியன் தியாகு
இந்த மருத்துவ முகாம் நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்;. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் சிலருக்கு முச்சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து கேட்டறியப்பட்டன.
தகவல் : நுவரெலியா சூரியன் தியாகு
செவ்வாய், 13 ஜூலை, 2010
கதிர்காமம் உற்சவத்தினை முன்னிட்டு விசேட போக்குவரத்துச்சேவைகள்
நேற்று 12 ஆம் திகதி ஆரம்பமான கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு; விசேட பஸ் மற்றும் ரயில் இணைந்த சேவைகள் நடத்தப்படுகின்றன. பக்தர்களின் நலன் கருதி, எதிர்வரும் 25 ஆம் திகதிவரை இச்சேவைகள் நடத்தப்படுமென ரயில்வே வணிக அத்தியட்சகர் விஜய சமரசிங்க அறிவித்துள்ளார் நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்தும் ஹப்புத்தளை, பண்டாரவளை, மாத்தறை ஆகிய நகரங்கள் வரை விசேட ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன. இந்த ரயில் நிலையங்களிலிருந்து கதிர்காமம் புனித நகரம்வரை பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.இதே மலையகத்திலிருந்து கதிர்காமத்திற்குச் செல்லவிருக்கின்ற பக்தர்களின் நலன் கருதி மலையக நகரங்களிலிருந்து விசேட பஸ் சேவைகளை நடத்துமாறு மலையக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய மாகாணத்தில் மர நடுகை
மத்திய மாகாணத்தில் மர நடுகைத் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு வன இலாகாத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கேற்ப மத்திய மாகாணத்திலுள்ள கண்டி, நுவரெலியா , மாத்தளை ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பிரதேசங்களில் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த மாவட்டங்களிலுள்ள காடுகள் அழிவடைந்து வருவதைத்தடுப்பதற்காகவும் சுற்றாடற் சமநிலையைப் பேணுவதற்காகவும்; காடுகள் அழிவடைவதால் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைத்தடுப்பதற்காவும் இந்த மர நடுகைத்திட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக வன இலாகாத் திணைக்களம் சுட்டிக் காட்டுகிறது.
அட்டன் - டிக்கோயா நகரசபையின் உள்ளுராட்சி வாரம்
உள்ளுராட்சி வாரத்தின் கல்வி ,நூலக அபிவிருத்தி மற்றும் விளையாட்டுத்தினத்தினை முன்னிட்டு இன்று அட்டன் - டிக்கோயா நகரசபையின் மூலம் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. இதற்கேற்ப அட்டன் - டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் நூலகத்தின் பயன்பாடு குறித்த செலமர்வுகளும் டிக்கோயா தரவளை மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றன. இந்த நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் 120 ஆவது நிறுவகர் தினமும் பரிசளிப்பு விழாவும் 15 ஆம் திகதி
அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் 120 ஆவது நிறுவகர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் 15 ஆம் திகதி அட்டன் டி.கே.டப்ளியூ .கலாசார மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் தலைமையில் இடம் பெறவுள்ள இந்த விழாவின் பிரதம அதிதியாக யாழ்ப்பல்கலைக்கழகத்தின் கல்விப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.டி.கலாமணியும் சிறப்பு அதிதியாக அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் பழைய மாணவியும் மன்னார் மாவட்டத்தின் நீதிவானுமாகிய திருமதி.கே.ஜீவராணியும் மற்றும் அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர.எம்.ரெங்கராஜும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தக்கல்லூரியின் 120 ஆவது நிறுவகர் தினம் கடந்த ஜீன் மாதம் 29 ஆம் திகதி கொண்டாடப்படவிருந்தது எனினும் இந்தக்கல்லூரியின் கணிதத்துறை ஆசிரியர் கே.ஜீவராஜன் திடீர் மரணமானதைத்தொடர்ந்து இந்தக்கல்லூரித்தினம் 15 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றமைக்குறிப்பிடத்தக்கது.
திங்கள், 12 ஜூலை, 2010
வெள்ளவத்தையில் தமிழர் மட்டும் பதிவு : மனோ கணேசன் கண்டனம் _
வெள்ளவத்தையிலுள்ள தமிழர்கள் மட்டும் பதிவு செய்யப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தை பிரதேச தமிழர்கள் மட்டும் காவல்துறையினரால் பதிவு செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்தே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை மட்டும் பதிவு செய்யும் இத்தகைய நடவடிக்கை மூலம் இன ஐக்கியத்திற்குப் பங்கம் ஏற்படக் கூடுமென மனோ கணேசன் கடிதம் ஒன்றின் மூலமாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்
பாடசாலை சிறுமி ஒருவரை கடத்த முற்பட்டதாக சந்தேக நபரை நையப்புடைத்த பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் : பொகவந்தலாவையில் சம்பவம்
பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியைக் கடத்துவதற்கு முற்பட்ட சந்தேக நபரொருவரை பொது மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தச் சம்பவம் ஒன்று இன்று காலை பொகவந்தலாவை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை கேர்க்கஸ்வோல்ட்ட இலக்கம் 2 பாடசாலையில் தரம் 7 இல் கல்விக்கற்கின்ற மாணவி ஒருவர் கேர்க்கல்ஸ்வோல்ட் கீழ்ப்பிரி தோட்டத்திலிருந்து பிரதான பாதையின் ஊடாக பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது பொகவந்தலாவை நகரப்பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் அந்த மாணவியின் கையைப்பிடித்து இழுத்துள்ளார்.இதன் போது அந்த மாணவி கூக்குரலிட்டுள்ளார் இதனைச் செவிமடுத்த அயலவர்கள் துரிதமாக செயற்பட்டு குறிப்பிட்ட நபரைப் பிடித்துக்கொண்டு நையப்புடைத்துள்ளனர். இந்தச்சம்பவத்தைக் கேள்வியுற்ற தோட்ட மக்கள் பெருந்திரளாக திரண்டதோடு தொழிலுக்குச்செல்லவும் மறுப்புத்தெரிவித்தனர்.. இதன் பின்பு இவ்விடயம் தொடர்பாக தோட்ட நிருவாகத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த பொகவந்தலாவை மற்றும் நோர்வூட் பொலிஸார் நிலைமையைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்பு சந்தேக நபரை இன்று முற்பகல் 11 மணியளவில் கைது செய்த நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்துள்ளனர். கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் சிறிய மின் உற்பத்தி நிலையமொன்றினை ஏற்படுத்தும் பணிகள் தற்போது இடம் பெறுகின்றன. இந்தப்பணிகளில் ஈடுபடுகின்ற பலாங்கொடை மாறாத்தென்ன பிரதேசத்தைச்சேர்ந்த நபரொருவரே மேற்படி சம்பவத்துடன் தொடர்புபட்டவர் ஆவார். இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்ட பாடசாலையின் அதிபரைத்தொடர்பு கொண்டு கேட்ட போது பெற்றோர் கொடுத்த தகவலொன்றைத்தொடர்ந்து சம்பவம் இடம் பெற்ற இடத்திற்குச்சென்று தான் விசாரணை நடத்தியதாகவும் இந்தச்சம்பவம் தொடர்பாக அட்டன் கல்விப்பணிமனையின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.இதே வேளை இந்தச்சம்பவம் தொட்ரபாக உரிய விசாரணைகளை நடத்துமாறு கேர்க்கஸ்வோல்ட் தோட்ட முகாமைத்துவத்துக்கும் நோர்வூட் பொலிஸாருக்கும் தான் அறிவித்ததாக இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
ஞாயிறு, 11 ஜூலை, 2010
அமரர் ஜீவராஜனின் நினைவுத்தினக் கூட்டம்
மலையகத்தின் பிரபல கணிதத்துறை ஆசிரியராகவும் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் உப அதிபராகவும் கடமையாற்றிய அமரர் ஜீவராஜனின் நினைவுத்தினக்கூட்டமும் நினைவு மலர் வெளியீடும் இன்று அட்டன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வெ.இராதாகிருஷ்ணன் ,மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் ,இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் ,தேசிய கல்வி நிறுவகத்தின் செயற்றிட்டப்பணிப்பாளர் பேராசிரியர் இரட்நாயக்க உட்பட பலர் கலந்து கொண்டு அமரர் ஜிவராஜனின் முக்கியத்துவம் பற்றியும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதென்றும் உரையாற்றினர்.
இந்த நிகழ்வின் போது ஜீவ விழி என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டமைக்குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)